சிவாஜி மாதிரி கையை வச்சிட்டு நடிக்க கேட்ட இயக்குனர். அப்படியெல்லாம் நடிக்க முடியாது என்று நடிக்க மறுத்துள்ள விஜய்.

0
26133
Vijay-Sivaji
- Advertisement -

தமிழ் சினிமா திரை உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டு இருப்பவர் தளபதி விஜய். சமீபத்தில் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான “பிகில்” படம் உலகம் முழுவதும் மாஸ் கிளப்பியது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவர்கள் நடித்து உள்ளார். இது அனைவருக்கும் தெரிந்ததே. தளபதி விஜயை வைத்து படம் இயக்க பல இயக்குனர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். அதுமட்டும் இல்லாமல் விஜயின் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னாடியே அவரின் அடுத்த படத்தை குறித்து பல கேள்விகள் சமூக வலைத்தளங்களில் எழுந்து வரும். யார் இயக்கப் போகிறார்? என்ன கதை? என்ன படம்? என்று கேள்விகளை தொடங்கி விடுவார்கள் ரசிகர்கள்.

-விளம்பரம்-
Image result for Vijay Sivaji

- Advertisement -

இந்நிலையில் பிரபல இயக்குனர் லிங்குசாமி அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்து உள்ளார். அதில் விஜய் குறித்து பல விஷயங்களை அவர் பேசி உள்ளார். அதில் அவர் கூறியது, தளபதி விஜய்க்காக நான் தற்போது ஒரு கதையை யோசித்துக் கொண்டிருக்கிறேன். சரியான கதை கிடைத்தவுடன் அவரிடம் சென்று நான் கதை கூறி விடுவேன். தற்போது உள்ள இளம் தலைமுறை நடிகர்கள் எல்லாம் விஜய்க்கு ரசிகர்களாக உள்ளனர். இனி வரும் காலங்களிலும் விஜய் ரசிகர்கள் படை கூடிக் கொண்டே தான் போகும். அந்த அளவிற்கு சினிமா துறையில் மிகப் பெரிய அளவில் விஸ்வரூபமெடுத்து உள்ளார் தளபதி.

இதையும் பாருங்க : பெற்றோர்கள் சம்மதிக்காததால் காதலரை திடீர் திருமணம் செய்து கொண்ட தேன்மொழி சீரியல் நடிகை.

மேலும், விஜயுடன் இணையும் வாய்ப்பு இதற்கு முன்னாடி எனக்கு பல முறை கிடைத்தது. ஆனால், ஏதோ ஒரு காரணங்களால் மிஸ் ஆகி விட்டது. தற்போது அவருடைய லெவலே வேற. அதனால் தற்போது இருக்கும் நிலைமைக்கு ஏற்றவாறு கதையை நான் உருவாக்க வேண்டும். சமீபத்தில் கூட நான் விஜய்க்காக ஒரு கதையை ரெடி செய்து அவரிடம் கூறினேன். அதில் ஒரு சில காட்சிகள் பாகப்பிரிவினை படத்தில் சிவாஜி போல கையை வைத்துக் கொண்டு நடிக்க வேண்டும் என்று நான் கூறினேன். ஆனால், அவர் அப்படி எல்லாம் நடிக்க முடியாது என கூறி மறுத்து விட்டார் என லிங்குசாமி தெரிவித்து உள்ளார்.

-விளம்பரம்-
Image result for பாகப்பிரிவினை

பிகில் படத்தை தொடர்ந்து தளபதி விஜய்யின் அடுத்த படமான ‘தளபதி 64’ படம் குறித்த பல தகவல்கள் இணையங்களில் வெளிவந்துள்ளது. இந்த படத்தை மாநகரம், கைதி படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்குகிறார். இந்த படத்தில் சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி பாக்யராஜ், ப்ரிகிடா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், சேத்தன், அழகம் பெருமாள், மேத்யூ வர்கீஸ், சுனில் ரெட்டி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து வருகின்றனர்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். மேலும், இந்த படத்தை எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் சேவியர் பிரிட்டோ தயாரிக்க உள்ளார்கள். அதோடு இன்னும் வரை தளபதி 64 படத்திற்கு பெயர் வைக்கவில்லை. விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கிறார். அதோடு இந்த படம் 2020 ஆம் ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு திரைக்கு வரும் என்ற தகவலும் வெளிவந்துள்ளது.

Advertisement