விஜய் தேவர் கொண்டா அணிந்திருக்கும் காஸ்ட்லி சட்டை குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. டோலிவுட்டில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் விஜய் தேவர்கொண்டா . தெலுங்கில் 2011 ஆம் ஆண்டு வெளியான “நுவ்விலா” என்ற படத்தின் மூலம் தான் இவர் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். ஆனால், இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது “அர்ஜுன் ரெட்டி ” திரைப்படம் தான்.
அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் நடிகர் விஜய் தேவர்கொண்டா அவர்கள் தென்னிந்தியா முழுவதும் பிரபலமானர். அதே போல சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான “கீதா கோவிந்தம்” திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதிலும் அந்த படத்தில் இடம் பெற்றுள்ள “இன்கேம் இன்கேம் கவாளி” என்ற பாடல் தமிழ், தெலுங்கு ,மலையாளம் என அணைத்து ரசிகர்களையும் ஈர்த்திருந்தது. இப்படி இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ஹிட் அடித்துவிடுகிறது.
சமீபத்தில் வெளியான லைகர் :
தற்போது விஜய் தேவர் கொண்டா ஹீரோவாக மட்டும் நடித்து வராமல் தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். இவர் தற்போது இவர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் ‘liger’. தர்மா புரொடக்சன்ஸ் மற்றும் பூரி கனெக்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. இந்த படத்தை பூரி ஜெகன்னாத் இயக்கி இருக்கிறார். லைகர் படத்தில் சர்வதேச புகழ்பெற்ற குத்துச் சண்டை வீரரான மைக் டைசனும் இந்த படத்தில் நடித்து இருக்கிறார்.
படத்தின் கதை :
படத்தில் விஜய் தேவர் கொண்டா குத்து சண்டை வீரராக இருக்கிறார். இவருக்கு சிறு வயதில் இருந்தே மைக் டைசனை குருவாக எண்ணிப் பார்த்து மார்சியல் ஆர்ட்ஸ் குருவாக ஆக மாற வேண்டும் என நினைக்கிறார். இதற்கு இடையில் இவர் அனன்யா பாண்டேவை காதலிக்கிறார். ஆனால், மைக் டைசன் தான் மொத்த கும்பலுக்கும் டானாக இருக்கிறார். அப்போது விஜய் தேவர் கொண்டாவின் காதலியை மைக் டைசன் கடத்தி விடுகிறார்.
இறுதியில் விஜய் தேவர் கொண்டா தன்னுடைய காதலியை மீட்டாரா? என்பதை படத்தின் கதை. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருக்கிறது. இந்நிலையில் விஜய் தேவர் கொண்டாவின் வித்தியாசமான சட்டை குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. பொதுவாகவே சினிமா பிரபலங்கள் வித்தியாசமான உடைகள் அணிவது வழக்கம். அதிலும் பலர் காஸ்ட்லியான பிராண்டுகளின் உடைகளை அணிந்து வருகிறார்கள்.
சட்டையின் விலை :
அந்த வகையில் தற்போது விஜய் தேவர் கொண்டா வித்தியாசமான சட்டையை அணிந்திருக்கிறார். அவர் ‘Greg Lauren’ என்ற பிராண்டின் வித்தியாசமான சட்டையை அணிந்திருக்கிறார். இதை பார்த்து நெட்டிசன்கள் பலரும் கேலி செய்து வந்தனர். ஆனால், இந்த சட்டையின் விலை கிட்டத்தட்ட 69 ஆயிரம் ரூபாய். வெவ்வேறு பேட்டர்ன்களில் வெவ்வேறு துணிகள் சேர்ந்து இருப்பதுபோல் இந்த சட்டை வித்தியாசமாக இருக்கிறது. தற்போது இந்த சட்டையின் புகைப்படமும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.