ரஜினிக்கே கடைசி 6 படங்கள் தோல்வி தான் என்று விழாவில் விஜய் தேவர்கொண்டா கூறி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. தெலுங்கு சினிமாவில் மிக பிரபலமான நடிகராக விஜய் தேவர்கொண்டா திகழ்கிறார். இவர் அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் தான் தென்னிந்தியா முழுவதும் பிரபலமானர். தெலுங்கில் 2011 ஆம் ஆண்டு வெளியான “நுவ்விலா” என்ற படத்தின் மூலம் தான் இவர் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.
" Annaatthe, Petta , Darbar, 2.0 Kabali, Lingaa Are Flop for Rajinikanth " – Vijay Devarkonda pic.twitter.com/jxQjj0tPGy
— Roвιɴ Roвerт (@PeaceBrwVJ) August 21, 2023
ஆனால், இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது “அர்ஜுன் ரெட்டி ” திரைப்படம் தான். அதே போல சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான “கீதா கோவிந்தம்” திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதிலும் அந்த படத்தில் இடம் பெற்ற “இன்கேம் இன்கேம் கவாளி” என்ற பாடல் தமிழ், தெலுங்கு ,மலையாளம் என அணைத்து ரசிகர்களையும் ஈர்த்திருந்தது. அதனை தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ஹிட் அடித்து இருக்கிறது.
விஜய் தேவர்கொண்டா திரைப்பயணம்:
கடைசியாக இவர் நடிப்பில் வெளியான படம் ‘liger’. இந்த படத்தை இயக்குனர் பூரி ஜெகன்நாதன் இயக்கி இருந்தார். இந்த படம் குத்து சண்டை போட்டியை மையமாகக் கொண்டு உருவாகி இருந்தது. இந்த படமானது தமிழ், தெலுங்கு, மலையாளம்,ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் Pan இந்தியா படமாக வெளியாகி இருந்தது. மேலும், இந்த படத்தில் பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
Rajini gave 6 flops back to back and gave comeback with #Jailer 😂
— Santhosh (@KuskithalaV6) August 21, 2023
– Vijay Devarakonda at #Kushi event pic.twitter.com/kG99dtOrv0
குஷி படம்:
இந்த படத்தில் அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் உட்பட பலர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்கள். இந்த படம் வெளியாகி மிக பெரிய அளவில் தோல்வி அடைந்து இருந்தது. இது பலரும் விமர்சித்து இருந்தார்கள். இதனை அடுத்து தற்போது விஜய் தேவர்கொண்டா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் குஷி. இந்த படத்தை இயக்குநர் சிவா நிர்வாணா இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் நடிகை சமந்தா, முரளி சர்மா, சச்சின் கதேர், சரண்யா பொன்வண்ணன், லட்சுமி என பல பிரபலங்கள் நடித்துள்ளனர் . இப்படம் செப்டம்பர் 1 ஆம் தேதி தெலுங்கு, தமிழ், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.
விஜய் தேவர்கொண்டா அளித்த பேட்டி:
இந்த நிலையில் தற்போது படத்திற்கான ப்ரமோசன் பணிகளில்படக்குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் நடிகர் விஜய் தேவரகொண்டா கோவையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பேட்டி அளித்து இருக்கிறார். அதில் அவரிடம் செய்தியாளர்கள், சமீபத்திய உங்களுடைய படங்கள் தோல்விகளை சந்தித்து வருகிறது. காரணம் என்ன ?என்று கேட்டு இருக்கிறார்கள். அதற்கு விஜய் தேவர்கொண்டா, இப்ப உள்ள சூப்பர் ஸ்டார் பிரபலங்கள் அனைவருக்குமே வெற்றி, தோல்வி இருக்கிறது. தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடைசியாக நடித்த 6 படங்கள் தோல்வி தான். ஆனால், அவர் ஜெயிலர் படம் மூலம் கம்பேக் கொடுத்துள்ளார். ரசிகர்கள் அனைவரும் எதுவும் பேசாமல் படம் பார்க்கின்றனர்.
Rajini Has Continues 6 Flops 👎
— MAHI 𝕏 – Infinity Plus YouTube (@MahilMass) August 21, 2023
– Actor Vijay Devarkonda #Leopic.twitter.com/9smW0ERZqv
பிரபலமான நடிகர்கள் குறித்து சொன்னது:
அதேபோல் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சீரஞ்சிவிக்கும் கடைசி 6,7 படங்கள் தோல்வி தான். அதில் அவர் நடித்த வால்டர் வீரய்யா படம் தோல்வி தான் அடைந்தது. இருந்தாலும், அதே எனர்ஜியுடன் தான் நடித்து வருகிறார். மேலும், ரஜினி, சீரஞ்சிவி ஆகிய பிரபலமான நடிகர்களின் படங்கள் சரியாக செல்லலாமல் இருக்கலாம் அவர்கள் தொடர்ந்து பிளாப் படங்களை கொடுத்தால் கூட அவர்களுக்கு மரியாதைக் குறைவாக பேசுவதில்லை. அவர்கள் எல்லாம் ஹிட் மற்றும் பிளாப்களுக்கு அப்பார்பட்டவர்கள்.
Superstars are beyond Hits and Flops says Vijay 🌟
— Sri Reddy (@MsSriReddy) August 21, 2023
Vijay Devarakonda about Rajinikanth Jailer movie 💥#Rajinikanth #JailerTelugu #VijayDevarakonda #Kushi pic.twitter.com/xvxyBNypj6
அவர்கள் சினிமாவுக்கு என்ன செய்தார்கள் என சிந்தியுங்கள். அனைவரையும் மதிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று கூறி இருந்தார். இப்படி விஜய் தேவர்கொண்டா பேசியதை கேட்டு ரசிகர்கள் கொந்தளித்து கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். விஜய் தேவர்கொண்டாவின் இந்த பேச்சை சரியாக புரிந்துகொள்ளாமல். ரஜினியின் கடைசி 6 படங்கள் Flop ஆகி விட்டதாக விஜய் தேவர்கொண்டா பேசிவிட்டதாக கூறி வருகின்றனர்.