விஜய் தேவர்கொண்டா தம்பிய பார்த்திருக்கீங்களா.! அவரும் சினிமாவில் நடிக்க போகிறாராம்.!

0
824

தெலுங்கு சினிமாவில் ‘ரவுடி’ என்று செல்லமாக அழைக்கப்படும் டோலிவுட் நடிகர் விஜய் தேவரகொண்டா, பெல்லி சூப்புலு’,அர்ஜுன் ரெட்டி’, `கீதா கோவிந்தம்’, டாக்ஸிவாலா’ உள்ளிட்ட தெலுங்குப் படங்கள் மூலம் தமிழ்’ ரசிகர்களைப் பெற்றவர். விஜய் தேவரகொண்டா. ‘நோட்டா’ படம் மூலம் தமிழ்ப் படங்களிலும் நேரடியாக நடிக்கத் துவங்கினர்.

Image result for vijay devarakonda brother

அதே போல பிரபல பத்திரிகை நிறுவனமானன போர்ப்ஸ் ஆண்டு தோறும் பல்வேறு துறைகளில் சாதிக்கும் மணர்களின் பட்டியலை வெளியிட்டது. அதில் கடந்த 2018 ஆம் ஆண்டின் இளம் இந்திய சாதனையாளர் பட்டியலில் விஜய் தேவரகொண்டா பெயர் இடம்பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

விஜய் தேவர் கொண்ட தற்போது டியர் காமிரேட்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவரது சகோதரர் ஆனந்த் தேவர்கொண்டா கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார். மகேந்திரா என்பவர் இயக்கும் இந்த படத்திற்கு பிரசாந்த் என்பவர் இசை அமைக்க உள்ளார்.

இந்த படம் 80 மற்றும் 90 கால கட்டத்தில் நடைபெறும் ஒரு காதல் கதையாக படமாக்கப்பட உள்ளது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்குடோராசாணி என்று பெயர் வைத்துள்ளனர். விஜய் தேவர்கொண்டா போலவே அவரது தம்பியும் தெலுங்கு சினிமாவை கலக்குவாரா என்று பொருத்திருந்து பார்ப்போம்.

-விளம்பரம்-

Advertisement