ரோல்ஸ் ராய்ஸ் இருக்க சிகப்பு நிற மாருதி,கருப்பு நிற மாஸ்க்குடன் வந்து வாக்களித்த விஜய் – VMI வாக்களிக்காமல் போனதற்கு காரணம் இது தான்.

0
448
vijay
- Advertisement -

நீலாங்கரை வாக்கு சாவடியில் நடிகர் விஜய் காலை முதல் ஆளாக வாக்களித்த நிலையில் தற்போது விஜய்யின் வோட் தான் சமூக வலைதளத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறார். 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த வேட்பாளர்களை ஆதரித்து அந்த இயக்கத்தின் நிர்வாகிகள் தீவிரமாக வாக்கு சேகரித்துவந்தனர் . விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் போட்டியிட விஜய் அனுமதி அளித்துள்ளார். இதையடுத்து அந்த 9 மாவட்டங்களிலும் நூற்றுக்கும் மேற்பட்ட விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் போட்டியிடுகின்றனர். 

-விளம்பரம்-

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் இன்று நடைபெறுகிறது. இப்படி தீவிரமாக அனைத்துக் கட்சிகளும், சுயேட்சை வேட்பாளர்களும் தேர்தலுக்காக பிரச்சாரம் செய்தது முடிந்து மக்கள் அனைவரும் இன்று ஒட்டு போட்டு வருகிறார்கள். தீவிரமாக மக்களும் தங்களுடைய ஜனநாயக கடமையை செய்து வருகிறார்கள். அந்த வகையில் விஜய்யும் தன்னுடைய ஜனநாயக கடமையை செய்ய வாக்கு சாவடி நடக்கும் இடத்திற்கு சென்று இருக்கிறார்.

- Advertisement -

மன்னிப்பு கேட்டாரா விஜய் :

இன்று காலை நடிகர் விஜய் அவர்கள் சென்னை நீலாங்கரையில் அமைந்து உள்ள வாக்குச்சாவடிக்கு 7மணிக்கு சென்றிருக்கிறார். விஜய் தனியாகவே வாக்குச்சாவடி அமைந்திருக்கும் இடத்திற்கு வந்தார். அங்கு வாக்குச்சாவடியில் போலீஸ் பாதுகாப்பு அமைக்கப்பட்டிருக்கிறது.விஜய் வந்த தருணத்தில் அங்கு 2 பேர் மட்டுமே அங்கு இருந்தார்கள். அப்போது அங்கிருந்த ஒரு மூதாட்டி ஒருவர் நடிகர் விஜய்யை பார்த்து வணக்கம் தெரிவித்தார். அதற்கு விஜய்யும் புன்னகைத்து அந்த மூதாட்டிக்கு வணக்கம் கூறினார். ஆனால், நடிகர் விஜய் வாக்குசாவடிகளில் வாக்களிக்க வந்தவர்களிடம் மன்னிப்பு கேட்கிறார் என்று வதந்திகளை பரப்பி இருக்கிறார்கள்.

சென்னை மாநகராட்சியில் ஒரே வேட்பாளர் :

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கத்தினர் சென்னை உட்பட பல மாவட்டங்களில் சுயேட்சையாக களமிறங்குகின்றனர். குறிப்பாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிக நபர்கள் போட்டியிடுகின்றனர் என கூறப்படுகிறது. சென்னை மாநகராட்சியில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 136 வது வார்டில் அறிவுச் செல்வி என்கிற வேட்பாளர் போட்டியிடுகிறார். விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சென்னையில் போட்டியிடும் ஒரே வேட்பாளர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

விஜய் யாருக்கு வாக்களித்தார் :

இப்படி ஒரு நிலையில் விஜய் யாருக்கு வாக்களித்தார் என்ற மிகப்பெரிய கேள்வி நிலவி வருகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலின் போது நடிகர் விஜய் சைக்கிளில் வந்தார். மேலும், அவர் வந்த சைக்கிளின் நிறம் சிகப்பு மற்றும் கருப்பு நிறத்தில் இருந்ததை கண்டு அவர் கண்டிப்பாக தி மு கவிற்கு தான் வாக்களித்தார் என்று பேச்சுக்கள் கிளம்பியது. ஆனால், இந்த முறை நடிகர் விஜய் சிகப்பு நிற காரில் வந்து வாக்களித்தார்.

VMIக்கு வாக்களிக்காத விஜய் :

அதோடு மட்டுமல்லாமல் அவர் வந்த கார் சிகப்பு மற்றும் அவர் அணிந்து இருந்த முகக்கவசம் கருப்பு என்பதால் அவர் இந்த முறையும் தி மு கவிற்கு தான் வாக்களித்து இருப்பார் என்று தற்போதே கிசுகிசுகிசுக்கப்பட்டு வருகிறது. சரி, அப்போது விஜய்யே அவரின் விஜய் மக்கள் இயக்கம் கட்சிக்கு வாக்களிக்கவில்லையா என்று கேள்வியும் எழலாம். ஆனால், உண்மையில் விஜய் வாக்கு செலுத்திய தொகுதியில் விஜய் மக்கள் இயக்கம் கட்சியினர் யாரும் போட்டியிடவில்லை என்பது குறிபிடித்தக்கது.

Advertisement