விஜய் 62-ல், இதுவரை நடிக்காத கதாப்பாத்திரத்தில் நடிக்கும் விஜய் ! அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

0
2446
Actor vijay

விஜய் மற்றும் முருகதாஸ் வெற்றிக்கூட்டணி மூன்றாவது முறையாக இணையும் விஜய்-62 படத்திற்கான படப்பிடிப்பு வரும் பிப்ரவரி மாதம் துவங்குகிறது. இந்த படத்திற்கான அப்டேட்டுகளை விஜய் ரசிகர்கள் கண் கொத்திப் பாம்பாக பார்த்துக்கொண்டு இருக்கிறன்றனர்.
vijayஇப்படத்திற்காக ஒளிப்பதிவாளராக கிறிஸ் கங்காதரன், எடிட்டராக ஸ்ரீகர் பிரசாத், இசையமைப்பாளராக ஆஸ்கர் ரஹ்மான் என ஒரு நட்சத்திர பட்டாளமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் கத்தி படத்தை போலவே இரண்டு விஜய் இருப்பார்கள். இதில் ஒரு விஜய்க்கு நாயகியாக ரகுல் ப்ரீத் சிங் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுவிட்டார்.

இது வரை விஜயை பார்க்காத கோணத்தில் காட்டப் போகிறார் முருகதாஸ். மேலும், இரண்டு விஜயில் ஒரு விஜய் உடல் ஊனமுற்ற கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக நம்பத் தகுந்த தகவல் வெளியாகியுள்ளது. அப்படி பார்த்தால் கண்டிப்பாக இதுவரை நாம் பார்த்திராத ஒரு தளபதி விஜயை பார்க்க உள்ளோம் என்பது உறுதி.