உருவாகிறது சர்கார் 2 திரைப்படம்..!முருகதாஸிடம் டிஸ்கஸ் செய்த விஜய்..1

0
1162
sarkar

இயக்குனர் ஏ ஆர் முருகஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியுக்க சர்க்கார் திரைப்படம் பல்வேறு பிரச்சனைகளை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. சர்கார் திரைப்படம் 200 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்திருந்தது. இதற்காக சர்கார் குழுவினர் இதற்கான வெற்றி விழாவையும் கொண்டாடினர்.

இந்நிலையில் ஆளுங்கட்சி தன்னை ஓவராக சீண்டிவிட்டதால் கடுப்பின் உச்சத்துக்குப் போன விஜய் ‘சர்கார் -2 கதை ரெடிபண்ணுங்க முருகதாஸ்’ என்று, இயக்குநரிடம் சொல்லியிருக்கிறார் என்று உறுதியாக கூறுகிறார்கள் விஜய்யின் மக்கள் இயக்கத்தை சேர்ந்த சீனியர் நிர்வாகிகள். கடந்த ஞாயிறன்று சென்னையில் சர்கார் படத்தின் சக்ஸஸ் பார்ட்டியை செம்ம சிம்பிளாக கொண்டாடினார்களே, அப்போது ரொம்பவே கடுப்பு மற்றும் எரிச்சல் முகத்தோடு இருந்தாராம் விஜய். ரஹ்மான், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி என எல்லோருக்கும் அதன் காரணம் புரிந்தது.

- Advertisement -

முருகதாஸ்தான் விஜய்யை கட்டியணைத்துக் கொண்டு ‘கூல் சார்! நாம பெருசா ஜெயிச்சுட்டோம்!’ என்று சொல்லியிருக்கிறார். அப்போது மெளனமாக மறுத்து தலையசைத்துவிட்டு சில நொடிகள் யோசித்த விஜய், பின் முருகதாஸை அழுத்தமாக பார்த்து ‘சர்கார் செகண்ட் பார்ட் ரெடி பண்ணுங்க பாஸ். பார்த்துக்கலாம்’ என்றாராம் வழக்கமான சின்ன உதடசைவுகளுடன். இது அங்கு கூடி நின்ன அனைவருக்கும் செம்ம சர்ப்ரைஸ்.

கீர்த்தியும், வருவும் சட்டென்று விஜய் மற்றும் முருகதாஸின் கைகளைப் பிடித்து குலுக்கி ‘கங்கிராட்ஸ்’ என்றிருக்கிறார்கள். ரஹ்மான் வழக்கம்போல் புன்னகை முகத்துடன் அமைதியாக நின்றுவிட்டார். சக்ஸஸ் பார்ட்டி முடிந்து கிளம்பிய பின்னும் விஜய்க்கு முக இறுக்கமும், மன இறுக்கமும் மாறவில்லையாம். தன்னோடு காரில் வந்தவர்களிடம் ‘எப்படியோ வந்த பவரை கையில வெச்சுக்கிட்டு என்னவேணா பண்ணுவாங்க.

-விளம்பரம்-

அதை நாம சொல்லிக் காண்பிச்சா தியேட்டரை உடைப்பேன், கொளுத்துவேங்கிற அளவுக்கு போவாங்களா? அப்போ உள்ளே உட்கார்ந்து படம் பார்க்கிற குழந்தைங்க உள்ளிட்டவங்களோட உயிர் என்ன தூசியா? என்னை நம்பித்தானே என் படம் ஓடுற தியேட்டருக்குள்ளே வர்றாங்க, அப்போ அந்த நம்பிக்கையை நான் காப்பாத்தணுமில்லையா? என் மேலே கோபம் இருந்தா என்னை அடிக்கட்டும், ஆனா தியேட்டரை அடிப்பேன்னு சொல்றது என்னய்யா வழக்கம்? பார்க்கலாம், பார்க்கலாம் செகண்ட் பார்ட் எடுப்போம், நானே தயாரிக்கிறேன், அப்போ என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்.” என்று கொதித்திருக்கிறார் என்று தகவல்கள் வருகின்றன.

அதேவேளையில், சர்கார் செகண்ட் பார்ட்டுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை. விஜய்க்கு அந்த ஆசை மற்றும் வெறி இருப்பது உண்மை. ஆனால் அவங்க அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் இதை அனுமதிக்கமாட்டார். அவர் எல்லாவற்றையும் கணக்குப் போட்டுதான் பண்ணுவார், சர்கார் பார்ட் 2வை தயாரித்து, அதன் ரிலீஸின் போது பிரச்னையாகியோ அல்லது ரிலீஸான பின் தியேட்டர்களில் சிக்கலானாலோ கோடி கோடியாய் நஷ்டமேற்படும், அதை யார் தாங்குவது? என்று நோவார் மனிதர்! என்கிறார்கள். என்ன செய்யப்போகிறார் தளபதி? நாங்க வெயிட்டிங்ல இருக்கோம்!

Advertisement