விஜய் மற்றும் வெற்றி இயக்குனர் முருகதாஸ் இணையும் விஜய்-62 படத்திற்கான எதிர்பார்ப்புகள் எக்கச்சக்கமாக எகிறிவிட்டன. அப்படி எகிற எகிற படத்திற்கான வதந்திகளும் அதிகம் ஆகிவிட்டன.
கடந்த சில நாட்களாக ட்விட்டர் மற்ரும் பேஸ்புக்கில் விஜய்-62 படத்தைப் பற்றி ஒரு செய்தி வலம் வந்துகொண்டிருக்கிறது. அதாவது இந்த படத்தில் விஜய் இரண்டு கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும், அதில் ஒரு விஜய் உடல் ஊனமுற்ற கேரக்டரில் நடிக்கவுள்ளதாகாவும் செய்திகள் வலம் வந்து. நம் இணையதளத்திலும் இதனைப் பற்றி கூறிருந்தோம்.
ஆனால், தற்போது நம்பத்தகுந்த தகவலின் படி, படத்தின் குழுவிடம் இருந்து இரு செய்தி வந்துள்ளது. விஜய் -62வில் தளபதி அப்படி (ஊனமுற்றோர்) ஒரு கேரக்டரில் நடிக்கவில்லை எனக் கூறியுள்ளனர். ஆனால் நடித்தால் நன்றாக இருக்கும் அல்லவா?
மேலும், முருகதாஸ் இன்னும் படத்திற்கான ப்ரீ ப்ரொடக்சன் வேலையில் தான் உள்ளார் எனவும் கூறினார். அதேபோல் படத்தினை பற்றி அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியிடவில்லை எனவும் கூறினார்.