விளம்பரத்துக்காக விஜய் சார் தூக்கினாரா ? தளபதியின் மாற்று திறனாளி சொன்ன உண்மை.

0
428
- Advertisement -

தளபதி விஜய் நடித்திருக்கும் “வாரிசு” படம் வரும் பொங்கலுக்கு ஆந்திராவில் வெளியிடக்கூடாது என தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் வரும் பொங்கலன்று தமிழ் நாட்டில் “வாரிசு” வெளியாகும் போது ரசிகர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கடந்த 3 வாரத்திற்கு முன்னர் விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் விஜய் பேசியிருந்தார். அப்போது பல ரசிகர்கள் கூட்டாக வந்து நடிகர் விஜயுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். மேலும் இந்த கூட்டத்தில் ரசிகர்களுக்கு விஜய் பல அறிவுரைகளை கூறியிருந்தார்.

-விளம்பரம்-

இந்நிலையில் கடந்த 8ஆம் தேதி மீண்டும் ரசிகர்களை நடிகர் விஜய் சந்தித்தார் அந்த சந்திப்பில் ரசிகர்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது. மேலும் ரசிகர்கள் விஜயுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர், அதில் ஒரு மாற்றுத்திறனாளியான பிரபாகரனை விஜய் கையில் தூக்கி வைத்துக்கொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டார். அந்த புகைப்படமானது தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில் பிரபாகரனிடம் பிரபல ஊடகம் பேட்டியெடுத்திருந்தது

- Advertisement -

அந்த பேட்டியில் அவர் கூறியதாவது `என்னுடைய சொந்த ஊர் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சிதண்டி என்கிற கிராமம். என்னுடைய தந்தை மற்றும் தாய் விவசாய கூலிகள். மேலும் எனக்கு ஒரு தங்கை இருக்கிறார் அவருக்கு திருமணமாகி விட்டது. நான் லேப் டெக்னிஷியன் படிப்பு படித்திருந்தாலும் என்னுடைய கால்களினால் குடும்பத்திற்கு உதவி செய்ய முடியவில்லை. எனக்கு 13 வயதில் இருக்கும் போது தசை சம்மந்தப்பட்ட நோய் தாக்கியத்தினால் என்னுடைய கால்களின் தசை வலுவிழந்து நடக்க முடியாமல் போனது.

அன்றிலிருந்து எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் என்னுடைய அப்பா அம்மாதான் என்னை பார்த்துக்கொள்கின்றனர். மேலும் சக்கர நாற்காலி மூலம்தான் செயல்பட்டு வருகிறேன். இருந்தாலும் நான் நடிகர் விஜய்யின் தீவிரமான ரசிகர், என்னால் நடக்க முடியாது என்றாலும் விஜய்யின் நடனத்தை பார்த்து மகிழ்ந்து வருகிறேன் என்று கூறினார். இந்நிலையில் தளபதி விஜய் செங்கல்பட்டு ரசிகர்களை காண வருகிறார் என தெரிந்தது. நானும் அவரை சந்திக்க வேண்டும் என்று விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளிடன் கூறினேன்.

-விளம்பரம்-

இதற்கு அவர்களும் ஒத்துழைத்து என்னை விஜய்யை காண அழைத்து சென்றனர். அங்கு ரசிகர்கள் பலரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர் ஆனால் என்னால் படியின் மேல் சக்கர நாற்காலியை ஏற்ற முடியவில்லை. இதனால் மற்றவர்கள் எனக்கு உதவி செய்து தூக்கிக்கொண்டு சென்றனர். அப்போது என்னை மற்றவர்கள் தூக்கிக்கொண்டு வருவதை பார்த்த விஜய் ஓடி வந்து என்னை தூக்கிக்கொண்டார். அதோடு நன்றாக இருக்குறீர்களா, உங்ககளுக்கு ஏதாவது வேண்டுமா? என்று சொல்லுங்கள் கண்டிப்பாக அதை செய்கிறேன் என்று கூறினார்.

தளபதி விஜய்யை நேரில் பார்ப்பதே பலருக்கும் கனவாக இருக்கும் நிலையில் அவர் என்னை தூக்கி புகைப்படம் எடுத்துக்கொண்டது என்னால் வார்த்தைகளினால் விவரிக்க முடியாத மகிழ்ச்சி ஏற்பட்டது. இப்படி நடிகர் விஜய் தூக்கி புகைப்படம் எடுத்துக்கொண்டதால் எங்களுடைய ஊரில் அனைவருக்கும் மகிழ்ச்சி அதோடு அஜித் ரசிகர்கள் கூட என்னை பார்த்து பாராட்டிவிட்டு செல்கின்றனர் என்றும். என்னை பலருக்கும் தெரியும்படி பிரபலமாகிய தளபதி விஜய்க்கு எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை என மகிழ்ச்சியுடன் கூறியிருந்தார் விஜய் ரசிகர் பிரபாகரன்.

Advertisement