10 வருடங்களை நிறைவு செய்த விஜய் படம். கொண்டாடும் ரசிகர்கள். ஆனால், அந்த இயக்குனரின் நிலைமை இதான்.

0
28830
Vijay
- Advertisement -

10 வருடங்களுக்குப் பிறகும் மாஸ் காட்டி இருக்கும் தளபதி விஜய்யின் படம். தற்போது இதை ட்ரெண்டிங் செய்து வருகிறார்கள் தளபதி ரசிகர்கள். சமீப காலமாகவே தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் கொடுத்த பழைய படங்களை ட்ரெண்டிங் செய்து வருகிறார்கள் ரசிகர்கள். அந்த வகையில் தளபதி விஜய்யின் சினிமா உலகில் திருப்புமுனையாக அமைந்த படத்தை ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றார்கள். 2009 ஆம் ஆண்டு இயக்குனர் பாபு சிவன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வந்த படம் “வேட்டைக்காரன்”. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளார்கள். விஜய், அனுஷ்கா உள்ளிட்ட பல நடிகர்கள் இந்த படத்தில் நடித்திருந்தார்கள். இந்த படம் தற்போது வெளியாகி 10 வருடங்கள் ஆனதை தொடர்ந்து ரசிகர்கள் ட்விட்டரில் கொண்டாடி வருகின்றனர்.

-விளம்பரம்-
Related image

அதோடு இந்த படம் காமெடி, பன்ச் டயலாக், ஆட்டம், ஆக்ஷன் என எல்லாம் கலந்த கமர்ஷியல் படமாக இருந்தது. இந்த படம் கலவையான விமர்சனங்களை தந்தாலும், குடும்ப ரசிகர்களின் ஆதரவை பெற்று படம் பட்டையை கிளப்பியது. மேலும், படம் வெளியாவதற்கு முன்னரே படத்தின் “நான் அடிச்சா தாங்க மாட்ட, கரிகாலன், புலி உறுமுது, ஒரு சின்ன தாமரை, என் உச்சி மண்டையில” ஆகிய பாடல்கள் எல்லாம் வேற லெவல்ல தெறிக்கவிட்டது. அதுமட்டுமில்லாமல் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த விஜய்யின் சூப்பர் ஹிட் படமான போக்கிரி படத்தின் வசூலில் இந்த வேட்டைக்காரன் படம் முறியடித்தது.

இதையும் பாருங்க : கிரிக்கெட்டில் அசத்தும் சூரியின் மகன். அஸ்வின் கையால் வாங்கிய பரிசு. புகைப்படத்தை வெளியிட்ட சூரி.

- Advertisement -

மேலும், இந்த படத்தில் முதன் முறையாக தளபதி விஜய்க்கு விஜய் ஆண்டனி அவர்கள் இசை அமைத்தார். இன்று இந்த படம் பத்தாண்டுகள் நிறைவடைவதை ஒட்டி விஜய் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் ஹாஸ்டேக் உருவாக்கிய வேட்டைக்காரன் படத்தின் புகைப்படங்களையும் அந்த படத்தின் பஞ்ச் டயலாக்கையும் பதிவு செய்து கொண்டாடி வருகிறார்கள். அதுமட்டும் இல்லாமல் இந்த படம் ரசிகர்களுக்காகவே செதுக்கிய படம் என்றும் சொல்லலாம். அந்த அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் இந்த படம் வரவேற்பை பெற்றது.

Image result for b. babusivan
இயக்குனர் பாபு சிவன்

-விளம்பரம்-

தற்போது கூட இந்த மாதிரி ஒரு படத்தில் விஜய் மீண்டும் நடித்தால் நன்றாக இருக்கும் என்றும் ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இந்த படத்தின் சண்டைக் காட்சிகளும், பஞ்ச் டயலாக் ஒவ்வொன்றும் வெறித்தனம். மேலும், வேட்டைக்காரன் படத்தில் வில்லன்களை பார்த்து நடிகர் விஜய் பேசும் ஒவ்வொரு பஞ்சும் பத்தி சொல்லவே வார்த்தை இல்லை. அதிலும் ‘உங்களுக்கெல்லாம் போலீஸ்காரன் பத்தாதுடா வேற வேற வேற வேட்டைக்காரன்’ என்ற டயலாக் இன்னும் வரை ரசிகர்களிடம் பேசப்பட்டு வருகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை அனுஷ்கா செம செக்ஸியாக நடித்திருப்பார். காமெடி, ரொமான்ஸ், டான்ஸ் என விஜய்க்கு போட்டியாக இவருடைய நடிப்பு இருந்தது.

Image result for rasathi serial director
ராசாத்தி சீரியல்

அதோடு இந்த படத்திற்கு பிறகு அனுஷ்காவை வேற எந்த படத்திலும் இந்த மாதிரி கதாபாத்திரத்தில் பார்க்க முடியவில்லை என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் வேட்டைக்காரன் படத்தை இயக்கிய இயக்குனர் பாபு சிவன் அவர்கள் இந்த படத்திற்கு பிறகு வேறு எந்த படத்தையும் இயக்கவில்லை. இதற்கு காரணம் என்ன என்று சரியாக தெரியவில்லை. அது மட்டுமில்லாமல் வேட்டைக்காரன் படம் தோல்வி அடைந்ததால் தான் பாபு சிவன் அடுத்த படத்தை இயக்கவில்லை என்ற ஒரு வதந்தியும் பரவியதாக கூறப்படுகிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது பாபுசிவன் அவர்கள் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “ராசாத்தி” என்ற சீரியலை இயக்கி வருகிறார். இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று போய்க் கொண்டிருக்கிறது.

Advertisement