பொள்ளாச்சி விவகாரம் உச்சகட்ட கோபத்தில் விஜய் ரசிகர்கள் செய்த செயல்.!

0
1120
- Advertisement -

தமிழ்நாட்டின் பொள்ளாச்சி மாவட்டத்தில் பெண்கள் பலரை பாலியல் துன்புறுத்தல் செய்து அதனை வீடியோ எடுத்து மிரட்டி வந்த கொடூரமான குற்றத்தை செய்த நான்கு பேரைக் கைது செய்தனர் போலீசார். தற்போது இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில் பலரும் தங்களது கண்டனத்தை பதிவிட்டு வருகின்றனர்.

-விளம்பரம்-

பாலியல் துன்புறுத்தல் (354 ஏ) மற்றும் தாக்குதல் (354 பி) ஆகியவற்றுடன் சேர்த்து ஐபிசி பிரிவின் கீழ் நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 2000 ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவுகளிலும் மற்றும் பெண்களின் மனிதாபிமான சட்டத்தின் தமிழ்நாடு தடைவிதிப்புகளிலும் அவை பதிவு செய்யப்பட்டன.

- Advertisement -

இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பலரும் குரல் எழுப்பி வருகின்றனர். மேலும், பல்வேறு நடிகர், நடிகைகளும் இந்த சம்பவம் குறித்து தங்களது கருத்துக்களையும் கண்டனத்தையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்ற நிலையில் விஜய் டிவி நேற்று தான் இந்த சம்பவத்திற்கு வருத்தத்தை தெரிவித்தது.

இந்த நிலையில் இந்த சம்பவத்தால் மிகவும் கொதித்துப்போன விஜய் ரசிகர்கள், தமிழகத்தில் பாலியல் குற்றம் புரிபவர்களை விரைவில் தண்டிக்கபட வேண்டும்! இல்லை துடிதுடிக்க தலை துண்டிக்கபட வேண்டும் என வாசகம் இடம் பெற்றுள்ள போஸ்டர் ஒன்றை ஓட்டியுள்ளனர். அதில் தெறி படத்தில் வரும் ஒரு காட்சியை பார்வை படுத்தியுள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement