பூஜைக்கு வராததுக்கு சாக்கு சொன்னாங்க – இப்போ இத கூட பண்ணாமல் விஜய் ரசிகர்களிடம் டோஸ் வாங்கும் பூஜா ஹேக்டே.

0
1600
pooja
- Advertisement -

சினிமா உலகில் முடிசூடா மன்னனாக தூள் கிளப்பிக் கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இறுதியாக இவர் நடித்த மாஸ்டர் திரைப்படம் வேற லெவல் வெற்றியை கண்டது. கொரோனா பிரச்சனை காரணமாக திரையரங்குகளில் 50% இருக்கைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருந்து நிலையில் கூட மாஸ்டர் திரைப்படம் பல கோடி வசூலை குவித்தது. இந்நிலையில் நடிகர் விஜய்யின் 65ஆவது படத்தை இயக்கப் போவது யார்? என்று சமூக வலைத்தளங்களில் பல கேள்விகள் அண்மைக் காலமாக எழுந்து வந்தது. இந்த படத்தை இயக்க சிவா, அருண் ராஜா, பாண்டிராஜ், அட்லி, வெற்றிமாறன் என்று பல இயக்குனர்கள் பட்டியல் சமூக வலைத்தளங்களில் வந்துகொண்டு இருந்தது.

-விளம்பரம்-

ஆனால், தற்போது ‘தளபதி 65’ படத்தை இயக்கும் வாய்ப்பை தட்டி பறித்துள்ளார் இயக்குனர் நெல்சன். தளபதி 65 படத்தின் தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் என்பது முதலிலேயே உறுதி செய்யப்பட்டு இருந்தது.இந்த படத்தின் பூஜை கடந்த மார்ச் 31 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று (ஜூன் 21) நெல்சன் பிறந்தநாளில் வெளியானது. அதே போல இரண்டாம் போஸ்டர் விஜய் பிறந்தநாளான இன்று இரவு 12 மணிக்கு வெளியானது.

- Advertisement -

இன்று விஜய் தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி பல்வேரு பிரபலங்கள் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், இந்த படத்தின் நாயகியான பூஜா ஹேக்டே, விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்தை கூட தெரிவிக்கவில்லை. நேற்று நெல்சன் பிறந்த நாளில் கூட அவருக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை.

அவ்வளவு ஏன் நேற்று படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்தது. அதற்கு கூட தனியாக ட்வீட் போடாமல், நெல்சன் போட்ட பதிவை பகிர்ந்து இருந்தார். இதனால் விஜய் ரசிகர்கள் பூஜா ஹெக்டே மீது விஜய் ரசிகர்கள் மிகுந்த கடுப்பில் ஆழ்ந்துள்ளனர். ஏற்கனவே இவர் இந்த படத்தின் பூஜையில் கலந்து கொள்ளவில்லை என்று ரசிகர்கள் பலர் திட்டி தீர்த்தனர்.

-விளம்பரம்-

பூஜைக்கு வராத கரணம் குறித்து சொன்ன பூஜா ஹேக்டே, நான் வேறு ஒரு இடத்தில் ஷூட்டிங்கில் இருப்பதால் தளபதி 65 படத்தின் முகுர்த பூஜையில் கலந்துகொள்ளவில்லை. ஆனால், என்னுடைய மனமும் எண்ணமும் படக்குழுவுடன் தான் இருக்கும். விரைவில் கலந்துகொள்ள காத்துகொண்டு இருக்கிறேன் என்று பதிவிட்டு இருந்தார்.

Advertisement