கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி கரம் நீட்டி வரும் விஜய் ரசிகர்கள்..!

0
397
Vijayfans

தமிழகத்தை கஜா புயல் புரட்டி போட்டு இருக்கிறது. இன்று அதிகாலை வேதாரண்யம் அருகே கஜா புயல் கரையை கடந்தது.கஜா புயலை தொடர்ந்து தமிழகம் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது.புயல் கரையை கடந்த போது, 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது.

kajapuyal

இந்த நிலையில் தற்போது பல மாவட்டங்களில் காற்று வீசி வருகிறது.கஜா புயலுக்கு தமிழகம் முழுக்க சுவர், வீடுகள் இடிந்து விழுந்து 20 பேர் பலியாகி உள்ளனர்.கஜா புயல் காரணமாக நாகை, கடலூர், திருச்சி, ராமநாதபுரம், திருவாரூர், புதுக்கோட்டை, தேனி மாவட்டத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக நாகப்பட்டினம், தஞ்சாவூர், கடலூர் பகுதிகளில் அதிக சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த பகுதிகளில் உள்ள பல்வேறு மக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது சேத நடவடிக்கைகளை துரிதப்படுத்தபட்டுள்ளது.

kaja

இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆங்காங்கே விஜய் ரசிகர்கள் சார்பாக பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர் . இந்த செய்தி விஜய் ரசிகர்களை பெருமையடைய செய்துள்ளது. சமீபத்தில் கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களுக்கு விஜய் ரசிகர்கள் பல்வேறு உதவிகளை செய்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.