234 தொகுதி, 5 மாநிலத்தில் தளபதியின் உத்தரவை செயல்படுத்தும் ரசிகர்கள், அதிரும் அரசியல் களம்

0
1554
vijay
- Advertisement -

உலக பட்டினி தினத்தில் விஜய் போட்ட உத்தரவால் ரசிகர்கள் செய்திருக்கும் செயல் ஒட்டுமொத்த அரசியலை கதிகலங்க வைத்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முடி சூடாக மன்னனாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவருக்கு கோடிக்கணக்கான பேர் ரசிகர்களாக இருக்கிறார்கள். இதனால் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ரசிகர்கள் ரசிகர் மன்றம் வைத்து இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

-விளம்பரம்-
Vijay

இப்படி இருக்கும் நிலையில் 2020 ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்கள். இப்படி விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றது அரசியல் வட்டாரத்தில் கதிகலங்க வைத்தது. அதுமட்டுமில்லாமல் விஜய் அழைத்து அவர்களை பாராட்டியும் இருந்தார். அதன் பின் பல ஆண்டுகளுக்கு பிறகு நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிட்டது. இதற்கு தளபதி விஜய் அவர்கள் தன்னுடைய புகைப்படம் மற்றும் மக்கள் இயக்கத்தின் கொடியை தேர்தலில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அனுமதி கொடுத்திருக்கிறார்.

- Advertisement -

விஜய் மக்கள் இயக்கம்:

இப்படி விஜய் மக்கள் இயக்கம் அரசியலில் ஈடுபட்டாலும் தங்களின் ஜனநாயக கடமையை செய்து வருகிறார்கள். அதுமட்டும் இல்லாமல் விஜய் தன் ரசிகர்களை அடிக்கடி சந்தித்து இருந்த புகைப்படம் எல்லாம் இணையத்தில் வைரலாகி இருந்தது. விஜயின் இந்த சந்திப்பு எல்லாம் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. இதை தொடர்ந்து தொண்டர்கள் கூட்டம் மாதம் மாதம் நடைபெறும் என்று விஜய் இயக்கம் சார்பாக அறிவிக்கப்பட்டு இருந்தது. விஜய் அவர்கள் திரைத்துறையை தாண்டி அரசியலிலும் தன்னுடைய செல்வாக்கை நிலைநாட்ட இருக்கிறார் என்று பலரும் கூறுகிறார்கள்.

விஜய் மக்கள் இயக்கம் செய்யும் சேவைகள்:

அதோடு விஜய் அரசியல் வருவதற்காக தான் இப்படி எல்லாம் செய்கிறார் என்றும் சோசியல் மீடியாவில் பேசப்பட்டிருந்தது. அந்த வகையில் சமீபத்தில் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அம்பேத்கரின் சிலைக்கு தமிழகம் முழுவதும் மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என்று விஜய் கோரிக்கை வைத்திருந்தார். இதை விஜய் மக்கள் இயக்கத்தினரும் சிறப்பாக செய்து இருந்தார்கள். இந்நிலையில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியாகி இருக்கிறது.

-விளம்பரம்-

உலக பட்டினி தினம்:

அதில், உலகம் முழுவதும் மே 28ஆம் தேதி அன்று, உலக பட்டினி தினம் அனுசரிக்கப்படுகிறது. உலக அளவில் நீண்ட கால பட்டினியால் வாழும் மக்களை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த தினம் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது. தளபதி அவர்களின் சொல்லுக்கிணங்க உலக பட்டினி தினத்தினை முன்னிட்டு பசி பிணியை போக்கிடும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தளபதி விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவை இயக்கம் திட்ட மூலம், வருகின்ற 28 5 2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பகல் 11 மணி அளவில், தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் நகரம், ஒன்றியம் மற்றும் பகுதிகளில் உள்ள ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ஒரு வேலை மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அறிக்கையில் கூறியது:

மேலும் தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக பட்டினி தினத்தை முன்னிட்டு ஒரு நாள் மதிய உணவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பசியால் வாடும் மக்களுக்கு இயன்றவரை உணவளித்து பசியை போக்கும் விழிப்புணர்வை, சமுதாயத்தில் ஏற்படுத்தும் நோக்கத்துடன் தளபதி விஜய் மக்கள் இயக்கம் இந்த நலப் பணியை செயல்படுத்துகிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement