அன்று விஜய்யை கேலி செய்த அதே ஹேஷ் டேக்கை போட்டு சூர்யாவை கலாய்க்கும் விஜய் ரசிகர்கள்.

0
2727
surya
- Advertisement -

வருமான வரிக்கு வட்டி செலுத்துவதில் இருந்து விலக்கு கோரி, நடிகர் சூர்யா தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2010 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடிகர் சூர்யாவின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் 2 07 – 2008, 2008- 2009 ஆம் நிதியாண்டிற்கான வருமான வரியை செலுத்த வேண்டுமென 2013ல் வருமான வரித் துறை கூறியது. இடைப்பட்ட ஆண்டுகளுக்கான வட்டியையும் செலுத்த வேண்டும் எனவும் கூறியது.

-விளம்பரம்-
வருமான வரிக்கு வட்டி செலுத்த சூர்யாவுக்கு கோர்ட் உத்தரவு | Chennai High  Court dismissed petetion filed by actor suriya against income tax interest  - Tamil Filmibeat

இந்த தீர்ப்பை எதிர்த்து வருமான வரித்துறை தீர்ப்பாயத்தில் சூர்யா தரப்பிலும், வருமான வரி தரப்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 2007-08, 2008-09ஆம் ஆண்டுளுக்கு 3 கோடியே 11 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் வரி செலுத்த வேண்டும் என்ற வருமான வரித்துறை மதிப்பீட்டு அதிகாரியின் உத்தரவை உறுதி செய்தது.

இதையும் பாருங்க : மைனா உருவத்தை நெஞ்சில் பச்சை குத்திய யோகேஷ் – சர்ப்ரைஸ்ஸான மைனாவின் உருக்கமான பதிவு.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து கடந்த 2018 ஆம் ஆண்டு சூர்யா தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது தனக்கான வருமான வரி மூன்றாண்டுகளுக்குப் பிறகுதான் மதிப்பீடு செய்யப்பட்டதால், தான் செலுத்த வேண்டிய வருமான வரிக்கு ஒரு சதவீதம் வட்டி விதிக்கப்பட்டிருப்பதைத் தள்ளுபடி செய்ய வேண்டுமென சூர்யா தரப்பு கூறியது.

மேலும், தான் ஒழுங்காக வரி செலுத்திவருவதாகவும் கணக்கிடுவதில் ஏற்பட்ட தாமதத்திற்கு வருமான வரித்துறையே காரணம் என்பதால், வட்டித் தொகையைச் செலுத்துவதிலிருந்து தனக்கு விலக்களிக்க வேண்டும் எனவும் சூர்யா கூறியிருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சோதனை நடந்த 45 நாட்களுக்குள் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும், ஆனால், சூர்யா தாமதமாகத்தான் கணக்கைத் தாக்கல் செய்தார் எனவும், வருமான வரி மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்கு சூர்யா முழு ஒத்துழைப்பு தரவில்லை என்றும் வருமான வரித்துறைதரப்பு வாதிட்டது.

-விளம்பரம்-

மேலும், சூர்யாவுக்கு முறைப்படி வாய்ப்பளிக்கப்பட்டதாகவும், வருமான வரி சோதனைக்குப் பிறகு வருமானம் குறித்த முழு விவரங்களை அளிக்கவில்லை என்பதால், வருமான வரி சட்டப்படி, வட்டி விலக்கு பெற சூர்யாவுக்கு உரிமை இல்லையெனவும் வருமான வரித்துறைதரப்பு கூறியது. வருமான வரித் துறையின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி நடிகர் சூர்யாவின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இப்படி ஒரு நிலையில்சமூக வலைதளத்தில் இந்த விவகாரம் விவாகதமாக மாறியிருக்கிறது. ட்விட்டரில் வரிகட்டுங்க_சூர்யா என்ற ஹேஷ் டேக்கை பதிவிட்டு விஜய் ரசிகர்கள் பலரும் கேலி செய்து வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் விஜய்யின் ரோல்ஸ் ராய்ஸ் நுழைவு வரி விவகாரத்தின் போது ட்விட்டரில் வரி கட்டுங்க விஜய் என்ற ஹேஷ் டேக் ட்ரென்டிங்கில் வந்தது என்பதும் கூறிப்பிடத்தக்கது.

Advertisement