100வது நாள் கொண்டாட்டம் இல்லையா ? அப்செட்டில் தளபதி ரசிகர்கள்

0
288
Actor Vijay
- Advertisement -

கடந்த தீபாவளிக்கு ரிலீஸ் ஆன மெர்சல் படம் இன்னும் சில தினங்களில் 100 நாட்களை தொட்டு சாதனை படைக்க உள்ளது. வழக்கமாக, விஜயின் படங்கள் என்றால் 25, 50, 75 ,100 என சாதனை நாட்கள் எல்லாவற்றையும் ரசிகர்கள் தியேட்டரில் சென்று பிரம்மாண்டமாக கொண்டாடுவது வழக்கம்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் மெர்சல் படத்தின் 75ஆவது நாளை வெகு விமர்சையாக கொண்டாடினர் விஜய் ரசிகர்கள். இந்த படம் விஜயின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய படமாக அமைந்துள்ளது. மொத்தம் ₹ 255 கோடி வசூல் செய்து தயாரிப்பாளருக்கு நல்ல வருமானத்தை கொடுத்துள்ளது.

- Advertisement -

இதனால் இந்த படத்தின் 100ஆவது நாள் கொண்டாட்டத்தை செம்மையாக கொண்டாட திட்டம் தீட்டியுள்னர் விஜய் ரசிகர்கள். 100வது நாள் அன்று அனைவரும் தியேட்டருக்கு சென்று படத்தை பார்த்துக்கொண்டே கொண்டாடலாம் என எண்ணினார்.

இதையும் படிக்கலாமே:
அஜித்திற்கு பிடித்த விஜய் படம் இது தானாம். அவரே கூறியுள்ளார்

ஆனால், மெர்சல் படத்தினை பொங்கல் அன்று டீவியில் ஒளிபரப்ப உள்ளதாக பிரபல டீவி சேனல் ஒன்று விளம்பரம் செய்துள்ளது. வெளியான சில மாதங்களில் படத்தினை டீவியில் போட்டால் அது படத்தினை பாதிக்கும், மேலும் 100வது நாள் கொண்டாடத்தையும் பாதிக்கும் என அப்செட்டில் உள்ளனர் விஜய் ரசிகர்கள்.