தமிழ் சினிமா உலகில் 40க்கும் மேற்பட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் தங்கர் பச்சான். இவர் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர், எழுத்தாளர், ஒளி ஓவியர், நடிகர் என பன்முகங்களை கொண்டவர். மேலும், தங்கர் பச்சான் அழகி, சொல்ல மறந்தகதை, பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு, களவாடிய பொழுதுகள் என பல திரைப்படங்களை இயக்கியும் நடித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் பார்த்திபன், சேரன், சத்யராஜ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இவருடைய படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இவர் எப்பவுமே எதார்த்தமான கிராமப்புற கதைகளை மையமாக கொண்டு படம் இயக்குவார். மேலும், கடைசியாக இவர் கருமேகங்கள் கலைக்கின்றன என்ற படத்தில் நடித்து இருந்தார். தற்போது தங்கர் பச்சானின் மகன் விஜித் ஹிரோவாக நடித்திருக்கும் படம் பேரன்பும் பெருங்கோபமும்.
எஸ்.ஏ.சந்திரசேகர்:
இந்த படத்தின் மூலம் தான் இவர் ஹீரோவாக அறிமுகமாக இருக்கிறார். இந்த நிலையில் இந்த படத்திற்கான விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக விஜயின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ சந்திரசேகர் கலந்து கொண்டிருந்தார். அப்போது அவர், என்னுடைய மகனை நானே சினிமாவில் அறிமுகப்படுத்தாமல் இன்னொருவரின் மூலம் அறிமுகப்படுத்தலாம் என்று நினைத்தேன்.

விஜய் பற்றி சொன்னது:
அது சாதாரண விஷயமும் இல்லை. நானும் என்னுடைய மகனை அப்படித்தான் அறிமுகப்படுத்த விரும்பினேன். விஜய்னுடைய ஆல்பத்தை வைத்துக்கொண்டு எத்தனையோ இயக்குனர்களிடம் போய் கேட்டேன். விஜய்யை வைத்து இயக்க யாருமே முன்வரவில்லை. அதனால் வேறு வழி இல்லாமல் நானே அவனுடைய படத்தை இயக்கினேன் என்று கூறியிருக்கிறார்.

விஜய் குறித்த தகவல்:
தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. அந்த வகையில் கடைசியாக விஜயின் நடிப்பில் வெளியாகியிருந்த ‘கோட்’ படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்று இருந்தது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது ஜனநாயகன் என்ற படத்தில் விஜய் நடிக்கிறார். இது தான் இவரின் கடைசி படம்.

விஜய் அரசியல்:
இது ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்தாலும் விஜய் அரசியலுக்கு வருவது சந்தோசத்தை கொடுத்து இருக்கிறது. இவர் தமிழக வெற்றிக் கழகம் என்று தன்னுடைய கட்சியின் பெயரை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தான் அறிவித்திருந்தார். அதை தொடர்ந்து விஜய் அரசியல் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். பின் இவர் தன் கட்சியின் கொடி, பாடல், உறுதிமொழி, கொள்கை எல்லாம் அறிவித்து இருந்தார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தான் விஜய் தன்னுடைய முதல் மாநாட்டை பிரம்மாண்டமாகவும் சிறப்பாகவும் நடத்தி இருந்தார்.






