தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக விளங்கி வருபவர்கள் ரஜினி மற்றும் கமல். இவர்கள் இருவருமே தற்போது அரசியல் களத்தை கண்டுவிட்டனர். இவர்கள் இருவருக்கும் பின்னர் தமிழ் சினிமாவில் மாபெரும் நட்சத்திரங்களாக இருப்பது விஜய் மற்றும் அஜித் தான். இதில் விஜய்யும் விரைவில் அரசியலுக்கு வருவார் என்று அவரது ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இப்படி ஒரு நிலையில் விஜய்யின் மக்கள் இயக்கம், அரசியல் கட்சியாக மாறி இருப்பதாக சமூகவலைதளத்தில் ஒரு செய்தி மிகவும் வைரலாக பரவியது. அதுமட்டுமல்லாது இந்திய தேர்தல் ஆணையத்தில் விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பாக அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சியை பதிவு செய்ததாகவும் தகவல் வெளியானது.
இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இன்று என் தந்தை திரு எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள் ஓர் அரசியல் கட்சியை ஆரம்பித்து உள்ளார் என்பதை ஊடகங்களின் வாயிலாக அறிந்தேன். அவர் தொடங்கியுள்ள கட்சிக்கும் எனக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எவ்வித தொடர்பும் இல்லை என திட்டவட்டமாக எனது ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம் அவர் அரசியல் தொடர்பாக எதிர்காலத்தில் மேற்கொள்ளும் எந்த நடவடிக்கைகளும் என்னை கட்டுப் படுத்தாது என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறேன்.
மேலும் எனது ரசிகர்கள் எனது தந்தை கட்சி ஆரம்பித்தார் என்பதற்காக தங்களை கட்சியில் இணைத்துக் கொள்ளவும் கட்சிப் பணியாற்ற வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் நமக்கும் நமது இயக்கத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் மேலும் என் பெயரையோ புகைப்படத்தையோ எனது அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ தொடர்புபடுத்தி ஏதேனும் விளம்பரங்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இப்படி ஒரு நிலையில் இன்று (நவம்பர் 6) காலை முதலே எஸ்.ஏ.சியின் வீட்டு வாசலில் பத்திரிகையாளர்கள் சந்தித்தார். அப்போது பத்திரிகையாளர்கள் சிலர் நீங்கள் தொடங்கியிருக்கும் இயக்கத்தில் பெயரிலேயே விஜய் இருக்கிறதே. தொடர்ச்சியாக 5 ஆண்டு காலமாக நீங்களும் விஜய்யும் பேசிக் கொள்வதில்லை என்று சொல்கிறார்களே? என்று கேள்வி எழுப்பபட்டது. அதற்கு பதில் அளித்த எஸ் ஏ சி,தனியாக வந்தீர்கள் என்றால் விளக்கம் சொல்வேன். மற்றவர்களின் கற்பனைக்கு எல்லாம் விளக்கம் சொல்ல முடியாது. கரோனா நேரத்தில் 2-3 முறை போனேன், பேசினேன். யாரோ ஒருத்தர் பேசுறாங்க. அதற்கு எல்லாம் பதில் சொல்லிட்டு இருக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறியுள்ளார்.
அதே போல, விஜய்க்கு தெரியாமல் கட்சி தொடங்கப்பட்டுள்ளதா? ஏனென்றால் அவர் அறிக்கையின் முதல் வரியிலேயெ ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன் என்கிறாரே என்று கேள்வி கேட்கப்ட்டதற்கு, அவருக்கு தெரியவில்லை என்று அவர் சொல்கிறார். விஜய் பெயரில் கட்சி தொடங்கவில்லை. அவருடைய பெயரில் 93-ல் ஆரம்பித்த அமைப்பு. ரசிகர் மன்றமாக தொடங்கி, நற்பணி மன்றமாக மாறி, மக்கள் இயக்கமாக மாறியுள்ளது. அதில் உள்ள தொண்டர்களுக்கு உற்சாகம் அளிக்கும் விதமாக செய்தேன். ஏனென்றால் அவர்கள் நல்ல விஷயங்கள் நிறைய செய்து கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு ஒரு அங்கீகாரத்தை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே பதிவு செய்திருக்கிறேன் என்று கூறியுள்ளார். இறுதியில் எல்லா கேள்விகளுக்கும் மழுப்பலாகவே பதிலளித்த எஸ்.ஏ.சந்திரசேகர், தனித்தனியாக வந்து செய்தியாளர்கள் கேட்டால் பதில் சொல்வதாகக் கூறிவிட்டு நழுவினார்.