என் மகனின் ஜாதி சான்றிதழில் இப்படி தான் இருக்கிறது – பொது மேடையில் போட்டுடைத்த எஸ் ஏ சி. வைரலாகும் வீடியோ.

0
1865
vijay
- Advertisement -

நடிகர் விஜய்யின் ஜாதி சான்றிதழ் ரகசியம் குறித்து விஜய்யின் தந்தை எஸ் ஏ சி பகிரங்கமாக கூறியுள்ளார். சமீபத்தில்  ‘சாயம்’ என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த படத்தில் விஜய் விஷ்வா (முன்னர் அபி சரவணன் என்று பெயர் வைத்து இருந்தார்) நாயகனாக நடித்து உள்ளார். அந்தோணி சாமி இயக்கி இருக்கும் இந்த படத்தில் பொன்வண்ணன், போஸ் வெங்கட், சீதா, இளவரசு, தென்னவன், செந்தி, எலிசெபத், பெஞ்சமின் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் யுகபாரதி, விவேகா, அந்தோனிதாசன், பொன் சீமான் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்

-விளம்பரம்-

படிக்கும் மாணவர்கள் மீது சாதி சாயம் பூசுவதால் அவன் வாழ்க்கையே எப்படி திசை மாறுகிறது என்பதை மையப்படுத்தி இந்தப்படம் உருவாகியுள்ளது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக இயக்குனரும் விஜய்யின் தந்தையுமான எஸ் ஏ சந்திரசேகரும் கலந்துகொண்டார். இந்த விழாவில் பேசிய எஸ் ஏ சி மாணவர்களிடம் சாதி சாயம் பூசக்கூடது என்பதை வலியுறுத்தும் விதமாக இந்தப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இதையும் பாருங்க : ஜன்னல் வைத்த உடையில் சகலமும் தெரிய சைடு போஸில் அலறவிட்ட ரகுல் ப்ரீத் சிங்கின் புகைப்படம்.

- Advertisement -

ஜாதியை ஒழிப்பதற்கு நாம் நமது வாழ்க்கையில் உண்மையாக என்ன செய்திருக்கிறோம். 40 வருடங்களுக்கு முன்பு என் மகளை கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு ஸ்கூலில் சேர்க்க சென்றேன். அங்கேய அப்ளிகேஷன் கொடுத்தார்கள் அதில் Natinality என்ற இடத்தில் இந்தியன் என்று குறிப்பிட்டேன். ஏனென்றால் இந்தியாவில் பிறந்தவர் அதனால் இந்தியர் என்று போட்டேன். மதம் என்ற இடத்தில் தமிழன் என்று போட்டேன். ஜாதி என்ற இடத்தில் தமிழன் என்று போட்டேன். நீங்கள் தப்பாக போட்டு இருக்கிறீர்கள் என்று சொன்னார்கள்.

எதுக்கு ஒரு 4 வயது பையனை பள்ளியில் சேர்க்கும் போதே அவர் இன்னார் தான் என்று முத்திரை குத்துரீங்க. அவன் தமிழனாக வளரட்டுமே என்றேன். முதலில் ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள். பள்ளியையே மூடும் அளவுக்கு போராட்டம் நடத்துவேன் என கூறியதும், பின் அமைதியாக ஒப்புக்கொண்டனர். வேறு வழியில்லாமல் அவர்கள் அப்படியே சேர்த்தார்கள். அப்போதிருந்து விஜய்யின் சான்றிதழில் சாதி என்கிற இடத்தில் தமிழன் என்றுதான் தொடர்ந்து வருகிறது. சாதிக்கு நாம் தான் முக்கியத்துவம் கொடுக்கிறோம். நாம் நினைத்தால், இதுபோல பள்ளியில் சேர்க்கும்போதே சாதியை குறிப்பிடாமல் தவிர்த்தால் இன்னும் இருபது வருடங்களில் சாதி என்கிற ஒன்றே இல்லாமல் போய்விடும்.

-விளம்பரம்-
Advertisement