மாசத்துல ஒரு தடவ மட்டும் என்னையும் அம்மாவையும் வந்து பாத்து இது மட்டும் பண்ணா போதும் – விஜய்க்கு வேண்டுகோள் வைத்த அவரின் தந்தை.

0
603
Sac
- Advertisement -

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக விளங்கி வருபவர்கள் ரஜினி மற்றும் கமல். இவர்கள் இருவருமே தற்போது அரசியல் களத்தை கண்டுவிட்டனர். இவர்கள் இருவருக்கும் பின்னர் தமிழ் சினிமாவில் மாபெரும் நட்சத்திரங்களாக இருப்பது விஜய் மற்றும் அஜித் தான். இதில் விஜய்யும் விரைவில் அரசியலுக்கு வருவார் என்று அவரது ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இப்படி ஒரு நிலையில் கடந்த ஆண்டு விஜய்யின் மக்கள் இயக்கம், அரசியல் கட்சியாக மாறி இருப்பதாக சமூகவலைதளத்தில் ஒரு செய்தி மிகவும் வைரலாக பரவியது.

-விளம்பரம்-

அதுமட்டுமல்லாது இந்திய தேர்தல் ஆணையத்தில் விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பாக அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சியை பதிவு செய்ததாகவும் தகவல் வெளியானது.இந்த தகவல் வெளியான சிறிது நேர்த்திலேயே நடிகர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் தனது தந்தை கட்சிக்கும் தனக்கும் எந்த சம்மந்ததும் இல்லை என்றும், தனது தந்தை ஆரம்பித்த கட்சியில் தனது ரசிகர்கள் யாரும் சேர வேண்டாம் என்றும் கூறியிருந்தார்.

- Advertisement -

மேலும் தன் பெயரையோ புகைப்படத்தையோ தனது அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ தொடர்புபடுத்தி ஏதேனும் விளம்பரங்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அறிவித்து இருந்தார்.இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற எஸ் ஏ சி பேசுகையில், விஜய்யும் நானும் ஒரு அப்பா மகன் எந்த அளவிற்கு பேசுனுமோ அந்த அளவுக்கு தான் பேசிக்கொண்டு இருக்கிறோம்.

திடீரென்று சண்ட கூட வரும். எந்த குடும்பத்தில் அப்பா மகனுக்கு சண்ட வரமா இருந்திருக்கு. ஆனால், எப்படா இப்படி பிரச்னை வரும் அத ஊதி பெருசாக்கிடலாம்னு பாத்துட்டு இருந்தா எப்படி. உங்களுக்கு எல்லாம் தெரியாத ரகசியம் ஒன்று நடைபெற்று இருக்கிறது. அது உடையும் போது விஜய்க்கு எல்லா உண்மையும் புரியும். விஜய் ஒரு விஷ வலைல மாட்டிக்கொண்டு இருக்கிறார் அவரை நான் வெளியில் கொண்டு வருவேன் என்று கூறி இருந்ந்தார்.

-விளம்பரம்-

கடைசியாப் பார்த்துப் பேசியது 2020 நவம்பர் 5. மூணு மாசமாச்சு. அவரை ரீச் பண்ண முடியலை. ‘துப்பாக்கி’ வரைக்கும் அவருக்கு மேனேஜர் மாதிரி இருந்திருக்கேன். மகனை நடிகனாக்க ஆசைப்பட்டு, மேக்கப் டெஸ்ட் எடுத்து, ஆல்பம் ரெடி பண்ணி பெரிய இயக்குநர்கிட்டயெல்லாம் கொடுத்தேன். ‘நானே தயாரிப்பாளராக இருக்கேன், படம் பண்ணுங்க’ன்னு சொன்னேன். யாரும் எடுத்துக் கொடுக்கலை. அவங்க மறுத்தப்ப நான்தான் ‘நாளைய தீர்ப்பு’ படத்தில் ஆரம்பிச்சு வரிசையா எடுத்தேன்.

‘சிறுவயதில் அவர் ஹோம்வொர்க் செய்யவில்லை என்று அடிப்பேன் ஆனால் 35 வயது ஆன பின்னரும் அவரை அதேபோல சின்ன பிள்ளையாய் பார்த்தது தான் என்னுடைய தவறு என்று உருக்கமுடன் பேசி இருந்தார். என்னதான் விஜய் பேசவில்லை என்றாலும் விஜய் குறித்து தொடர்ந்து பல பேட்டிகளில் பேசி வருகிறார் எஸ் ஏ சி .இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஏஸ் ஏ சியிடம் ‘ஒரு அப்பாவா விஜய் என்ன விஷயத்தை நிறைவேத்தனும் அப்படி இருக்கும் விஷயம் என்ன’ என்று கேட்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்த எஸ் ஏ சி ‘மாதத்திற்கு ஒருமுறை வீட்டிற்கு வர வேண்டும் அதே நேரம் உங்கள் அனைவருடனும் அமர்ந்து பேச வேண்டும் . ஹாய்பா ஹாய்மா என்று ரெண்டு தட்டு தட்டிட்டு போக வேண்டும். அவர் எவ்ளோ பிஸியாக இருந்தாலும் மாசத்துக்கு ஒரு முறை வந்து எங்களை பார்த்து பேசி விட்டு செல்வதே பெரிய விஷயம் தான் ‘ என்று மிகவும் உருக்கமுடன் பேசிய இருக்கிறார் எஸ் ஏ சி.

Advertisement