அந்த ஆண்டுக்கு முன் விஜய் அரசியலுக்கு வந்திருந்தா வெற்றி பெற்று இருக்க முடியும் – விஜய் தந்தை எஸ் ஏ சி.

0
218
Sac
- Advertisement -

அம்பேத்கருடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டு இளையராஜா பேசுவதில் எந்த தவறும் இல்லை என்று இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் அளித்து இருந்த பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்திய சினிமா உலகில் இசையில் ஜாம்பவானாக திகழ்பவர் இளையராஜா. இவருடைய இசைக்கு மயங்காத உயிர்களே இல்லை என்று சொல்லலாம். ஏன்னா, அந்த அளவிற்கு தன்னுடைய இசையில் எல்லோரையும் கட்டிபோட்டவர். மேலும், இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்து இருக்கிறார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழி படங்களுக்கும் இசையமைத்து இருக்கிறார்.

-விளம்பரம்-

இதனால் இவருக்கு பல விருதுகள் கிடைத்து இருக்கிறது. இந்த சூழ்நிலையில் சமீபத்தில் இசைஞானி இளையராஜா அவர்கள் புத்தக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு இருந்தார். அப்போது அவர் மோடியும், அம்பேத்கரும் என்ற புத்தகத்தை வெளியிட்டு, இந்த புத்தகத்திற்கு முன்னுரையையும் எழுதி இருந்தார். மேலும், இந்த புத்தக வெளியீட்டு விழாவில் இளையராஜா, பிரதமர் மோடியின் தலைமையிலான அரசின் கீழ் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

- Advertisement -

மோடி குறித்து இளையராஜா பேசியது:

தற்போது இதனை அம்பேத்கார் கண்டால் பெருமைப்படுவார் என்று அண்ணல் அம்பேத்கருடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டு இளையராஜா பேசி இருந்தது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த ஒப்பீட்டுக்கு சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. அதுமட்டும் இல்லாமல் பலரும் இளையராஜாவை கடுமையாக விமர்சித்து பேசி வருகின்றனர். அதில் சிலர், தன்னுடைய பேச்சுக்கு இளையராஜா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறி இருக்கின்றார்கள்.

எஸ்.ஏ.சந்திரசேகர் அளித்த பேட்டி:

சில வாரங்களாகவே இது தான் சோசியல் மீடியாவில் விவாதப் பொருளாக மாறி இருக்கிறது. இந்நிலையில் இளையராஜா பேசியது குறித்து எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி அளித்து இருக்கிறார். சமீபத்தில் நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குனருமான சந்திரசேகர் அவர்கள் பேட்டி ஒன்றை அளித்திருந்தார் அதில் அவர் இளையராஜா கூறிய கருத்திற்கு விளக்கம் கொடுத்து பேசி இருக்கிறார். அதில் அவர் கூறி இருப்பது, எதிர்கால இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையுடன் செயல்படுபவர் மோடி.

-விளம்பரம்-

இளையராஜா குறித்து எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியது:

அம்பேத்கரையும் மோடியையும் ஒப்பிடுவது எந்த தவறும் இல்லை. அதேபோல் விஜய் உடன் இருப்பவர்களுக்கு அரசியல் தெரியவில்லை. சரியான அஸ்திவாரம் இல்லாததே கமல், சிரஞ்சீவி போன்ற நடிகர்களின் அரசியல் தோல்விக்கு முக்கிய காரணம். அதுபோன்ற ஒரு அஸ்திவாரத்தை தான் விஜய்க்கு நான் போட நினைத்தேன். கடந்த 2019-க்கு முன் விஜய் அரசியலுக்கு வந்திருந்தால் வெற்றி பெற்றிருக்க முடியும். இன்று திமுக இருப்பதால் விஜய்க்கான தேவை எழவில்லை. தமிழகத்தில் அனைத்து மத மக்களும் சகோதரத்துடன் வாழ்கின்றனர்.

எஸ்.ஏ.சந்திரசேகரின் திரைப்பயணம்:

அரசியல்வாதிகள் தான் மதத்தை வைத்து விளையாடுகின்றனர் என்று கூறி இருக்கிறார். இப்படி இவர் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் எஸ்.ஏ. சந்திரசேகர் அவர்கள் திரைப்பட இயக்குனர் மட்டுமல்லாமல், நடிகர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என பன் முகங்களை கொண்டவர். 1981 ஆம் ஆண்டு வெளிவந்த ‘சட்டம் ஒரு இருட்டறை’ என்ற படத்தில் தான் எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள் இயக்குனராக அறிமுகமானார். பின் இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் 70க்கும் மேற்பட்ட திரைப் படங்களை இயக்கி இருக்கிறார்.

Advertisement