விஜய்க்கு பிடித்த பாடல் இதுதானாம்..? இமானிடம் அவரே சொன்ன உண்மை..! எந்த படம்..பாடல் தெரியுமா..?

0
429
Actor-vijay

வெரசா போகையிலே…’ பாடல் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர், பார்வதி. “சினிமாவுல எந்தப் பின்புலமும் எனக்குக் கிடையாது. அப்படி இருக்கும்போது சினிமா வாய்ப்புகளைத் தேடிப்போறது ரொம்பக் கஷ்டம். என்ன நடந்தாலும் அதை ஏத்துக்கணும். தோல்விகளைப் பழகிக்கணும்னு நினைச்சேன். சினிமாவுல என்ட்ரி ஆகுறது ஈஸி.

parvathy

அதைத் தக்க வெச்சுக்கிட்டு இயங்குறதுதான் கஷ்டம்.” – என்கிறார், பார்வதி. இவர் எழுதிய அத்தனை பாடல்களும் ஹிட்.
வெரசா போகையிலே…’ உங்க முதல் பாடல். அதைக் கேட்டு, நடிகர் விஜய் எப்படி ரியாக்ட் பண்ணார்?”

வெரசா போகையிலே…’ உங்க முதல் பாடல். அதைக் கேட்டு, நடிகர் விஜய் எப்படி ரியாக்ட் பண்ணார்?”
கண்டாங்கி…’ பாடல் அவர் பாடியிருந்தாலும், `வெரசா போகையில…’ பாட்டுதான் அவருக்கு ரொம்பப் பிடிச்சிருந்துனு இமான் சார்கிட்ட சொல்லியிருந்தார். என்னைப் பார்க்க விரும்புறதாகவும் சொல்லியிருந்தார். இதுதவிர, இயக்குநர் முருகதாஸ் சார், `காஷ்மோரா’ இயக்குநர் கோகுல் இவங்க ரெண்டுபேரும் இந்தப் பாடலுக்காக என்னைப் பாராட்டுனாங்க. `கண்ணுக்குள் பொத்திவைப்பேன்…’ பாடலுக்காக `ஆந்திரா மெஸ்’ இயக்குநர் ஜெய், இலங்கை வானொலி அப்துல் ஹமீது ரெண்டுபேரும் பாடல் வரிகள் ரொம்ப தனித்துவமா இருக்குனு சொன்னாங்க.

vijay

கவிஞர் அறிவுமதி ஐயாகிட்ட `வல்லினம்’ படத்துல நான் எழுதியிருந்த `நகுலா…’ பாடலை வாசிச்சுக் காட்டினேன். இடைவிடாம, பத்து நிமிடம் அந்தப் பாடலைப் பற்றிப் பாராட்டினார். `இந்த பாடல் வரிகளைப் படிக்கும்போது ரொம்பப் பெருமையா இருக்கு’னு சொன்னார்.