ரஜினி, கமல், விஜய், அஜித் குறித்த கேள்விகளுக்கு தமிழில் பதில் அளித்த சல்மான் கான். வைரலாகும் வீடியோ.

0
69377
salman
- Advertisement -

இந்தி நடிகரான சல்மான் கான் பாலிவுட் சினிமாவில் சர்ச்சைக்குரிய நடிகராக திகழ்ந்து வந்தவர். இருப்பினும் இவருக்கு இருக்கு கோடிக் கணக்கான ரசிகர்கள் இருக்கத் தான் செய்கின்றனர். இந்தி சினிமாவின் மிக புகழ் வாய்ந்த முன்னனி நடிகர்களில் ஒருவர் என்பதை நிலைநிறுத்தினார். இவர் முதன் முதலாக 1988 ஆம் ஆண்டு “பீவி ஹோ தோ ஐசி” என்ற திரைப் படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். பின் 1989 ஆம் ஆண்டு சூரஜ் ஆர். பர்ஜத்யாவின் திரைப் படமான மைனே பியார் கியா திரைப் படத்தில் தான் அவர் முதன் முறையாக முன்னனி கதாபாத்திரம் ஏற்று நடித்தார்.

-விளம்பரம்-

நான் சந்தித்த மனிதர்களிலே மிக சிறந்த மனிதர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், சல்மான் கானின் உற்சாகம் பொங்கிய வார்த்தைகள்!ஜீ…

Zee Tamil ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಸೋಮವಾರ, ಡಿಸೆಂಬರ್ 30, 2019

அப்படம் வர்த்தரீதியாக மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. மேலும், சிறந்த அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருதையும் அப்படம் அவருக்கு பெற்று தந்தது. சமீபத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கானை வைத்து நடிகர் பிரபு தேவா அவர்கள் “தபாங் 3” என்ற படத்தை இயக்கி உள்ளார். மேலும், இந்த படம் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகி பட்டய கிளப்பி உள்ளது. நடிகர் சல்மான் கான் அவர்கள் தனது சகோதரர் அர்பாஸ் கான் உடன் இணைந்து இந்த படத்தை தயாரித்து உள்ளார். இந்த படத்தில் சல்மான்கான், சோனாக்‌ஷி சின்ஹா, கன்னட நடிகர் சுதீப், மஹி ஹில் உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள்.

இதையும் பாருங்க : அமெரிக்காவில் நீச்சல் குளத்தில் பிகினி உடையில் டிடி. ரசிகர்களை ஷாக்காக்கிய டிடியின் பதிவு.

- Advertisement -

மேலும், தபாங் படத்தின் முந்தைய இரண்டு பாகங்களும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. சமீபத்தில் தான் இந்த படத்தின் படக்குழுவினர் அனைவரும் சென்னைக்கு வந்து புரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றுக்கு வந்து உள்ளார்கள். அப்போது பிரபலமான தொகுப்பாளரான அர்ச்சனா அவர்கள் நடிகர் சல்மான்கானை பேட்டி ஒன்று எடுத்து உள்ளார். அதில் பல பிரபலங்களின் புகைப்படங்களை காட்டி ஒவ்வொரு படத்திற்கும் நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீகள் என்று கேள்வி கேட்டு இருந்தார். அதற்கு சல்மான் கான் அவர்கள் சொன்னது,

ஷாருக்கான் —எப்படிப்பா இருக்க.

-விளம்பரம்-

அனுஸ்கா ஷர்மா—ஏன் பந்தை பார்த்து வெளியில் அடிக்கிறார்.

தளபதி விஜய் — சூப்பர் ஸ்டார், எப்படி இவ்வளவு சூப்பரா பண்றீங்க.

கமலஹாசன்– எப்படி இருக்கீங்க சார்.

பிரபுதேவா– டிசம்பர் 4ஆம் தேதி என் பிறந்த நாளன்று ஷூட்டிங் பண்ணனுமா?

அஜித்குமார்– இவருடைய வாலி எனக்கு ரொம்ப பிடிக்கும். ரொம்ப நல்ல படம். “டிக்
டாக்”
ரஜினிகாந்த்– நம்ம நாட்டோட பெரிய சூப்பர் ஸ்டார். நான் சந்தித்த மிகச் சிறந்த மனிதர். கடைசியா உங்க கிட்ட நீங்க என்ன சொல்லுவீங்க என்று அர்ச்சனா கேட்டதற்கு, என்ன சார் பண்ணறீங்க என்று சொல்லுவேன் என்று சல்மான் கான் கூறினார்.

Advertisement