#வரிகட்டுங்க_விஜய், ட்ரெண்டிங்கில் வந்த ஹேஷ் டேக், வைரலாகும் மீம்ஸ். விஜய்யை வச்சி செய்யும் நெட்டிசன்கள்.

0
859
- Advertisement -

தன்னுடைய சொகுசு காருக்கு வரி விலக்கு கேட்ட விஜய்க்கு அறிவுரை கூறியதோடு 1 லட்ச ருபாய் அபராதமும் விதித்துள்ளது. தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தி விஜய் பல கோடிகளில் சம்பளம் வாங்கக் கூடியவர். தற்போது வரை 64 படங்கள் நடித்துள்ள அவருக்கு பல நூறு கோடிகளில் சொத்து இருக்கலாம் என யூகிக்கமுடிகிறது.பிகில் படத்திற்கு 50 கோடி சம்பளம் வாங்கிய விஜய், இறுதியாக வெளியான மாஸ்டர் படத்திற்கு 80 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றார். தற்போது நடித்து வரும் ‘பீஸ்ட்’ படத்திற்கு இவரது சம்பளம் 100 கோடி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

-விளம்பரம்-

தமிழ் சினிமாவில் இருக்கும் பல்வேறு நடிகர் நடிகைகள் சொகுசு கார்களை தான் பயன்படுத்துகின்றனர். பெரும்பாலான பிரபலங்கள் Audi, Bmw என்று சொகுசு கார்களை பயன்படுத்துகின்றனர். ஆனால், தமிழ் சினிமாவில் ரோல்ஸ் ராய்ஸ் கார் இரண்டே நபர்களிடம் தான் இருக்கிறது. அதில் விஜய்யும் ஒருவர். 2012ல் இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் காரை நடிகர் விஜய் இறக்குமதி செய்து வாங்கியிருந்தார்.

- Advertisement -

அந்த காருக்கு நுழைவு வரி செலுத்தாததோடு, வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் அவர் பதிவு செய்யவில்லை. இந்த நிலையில், இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு உரிய வரியைச் செலுத்தும்படி வணிக வரித் துறை அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், தன்னுடைய கார் இன்னும் பதிவு செய்யப்படவில்லை என்றும் அந்த காரை பயன்படுத்தப்படுவதில்லை.

அதனால் நுழைவு வரி விதிக்க தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவின் விசாரணை சென்னை உயர் நீதி மன்றத்தில் வந்த போது, விஜய்யின் மனுவை விசாரித்த நீதிபதிகள், சமூக நீதிக்கு பாடுபடுவதாக பிரதிபலிக்கும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது. நடிகர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டும்.

-விளம்பரம்-

ரீல் ஹீரோக்களாக இருக்க கூடாது. வரி என்பது நன்கொடையல்ல, கட்டாய பங்களிப்பு, வரி ஏய்ப்பு என்பது தேச துரோகத்துக்கு சமம் என்று என்று கூறியுள்ளனர். மேலும், நடிகர் விஜய்க்கு 1,00,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அந்த அபராத தொகையை இரண்டு வாரத்துக்குள் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அளிக்க வேண்டும் என்றும் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தி வெளியான உடன் ட்விட்டரில் #வரிகட்டுங்க_விஜய் என்ற ஹேஸ் டேக் ட்ரெண்டிங்கில் வந்துள்ளது. மேலும் விஜய்யை வரி கட்ட சொல்லி பல மீம்கள் கூட வைரலாகி வருகிறது. நடிகர் விஜய் தனது ரோல்ஸ் ராய்ஸ் காரை பயன்படுத்துவதில்லை என்று கூறி இருந்தார். ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் நடிகர் விஜய்யின் ரோல்ஸ் ராய்ஸ் கார் ரோட்டில் உலா வந்த புகைப்படங்கள் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கத்து.

Advertisement