ரஜினிக்கு இணையாக விஜய்க்கு பெயர் வந்த தினம் இன்று.! ஏன் தெரியுமா ?

0
1457
Vijay-Rajini
- Advertisement -

இளையதளபதி விஜய் தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக விளங்கி வருகிறார். இவரது திரை பயணத்தில் பல்வேறு சூப்பர் டூப்பர் படங்களை கொடுத்துள்ளார். அதில் ஒரு சில படங்கள் பாக்ஸ் ஆபீஸ் வசூலையும் பெற்றுள்ளது. அந்த வகையில் விஜய்க்கு முதல் பாக்ஸ் ஆபீஸ் படமாக அமைந்தது கில்லி திரைப்படம் தான்.

-விளம்பரம்-
Image result for ghilli

இயக்குனர் தரணி இயக்கத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தில் விஜய், திரிஷா, பிரகாஷ்ராஜ் போன்ற பலர் நடித்திருந்தனர். தெலுங்கு படத்தின் ரீமேக் தான் என்றாலும் தமிழில் இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. இந்த படத்திற்கு முன்னால் தொடர் தோல்வி படங்களை சந்தித்த விஜய்க்கு இந்தப் படம் மாபெரும் திருப்புமுனை படமாக அமைந்து இருந்தது.

- Advertisement -

சொல்லப்போனால் விஜய்யின் முதல் பாக்ஸ் ஆபிஸ் வசூலை குவித்த திரைப்படம் இந்த திரைப்படம் தான். அப்போதே இந்த திரைப்படம் சுமார் 48 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்து இருந்தது. இந்த திரைப்படத்திற்கு முன்னால் வந்த விஜய் படங்கள் எதுவும் இவ்வளவு கோடி வசூல் செய்து இல்லை.

இந்த படத்திற்கு முன்னால் நடிகர் விஜய் நடித்த பத்ரி பிரண்ட்ஸ் பிரியமானவளே குஷி போன்ற பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடைந்தாலும் 50 கோடி வசூலை கில்லி திரைப்படம் நான் முதல் முதலில் பெற்றுத்தந்தது ரஜினிக்கு இணையாக விஜயும் ஒரு சூப்பர் ஸ்டார் என்ற ஒரு அந்தஸ்தை கொடுத்தது கில்லி திரைப்படம் இந்த திரைப்படம் வெளியாகி இன்றோடு (ஏப்ரல் 17 )15 ஆண்டுகள் ஆன நிலையில் #15YearsOfGhilli என்ற ஹேர்ஸ்டைல் விஜய் ரசிகர்கள் செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement