2.ஆரம்ப காலத்தில் மீண்டும் இவரை பிளாப் பக்கத்திற்கு அழைத்து சென்ற படங்கள் 'பிரியமுடன்' மற்றும் 'நிலவே வா' போன்ற படங்களாகும்.
3.அதன் பின்னர் வெற்றிக் கொடி பறக்கவிட்ட விஜய், புதிய கீதையில் மீண்டும் கீழே விழுந்தார். படத்தின் கதையம்சம், இயக்கம் என அனைத்துமே நன்றாக இருந்தும் பிளாப் ஆன படம் புதிய கீதை.
4.'உதயா' படத்தின் கதையை இவரை மீண்டும் பிளாப்பிற்கு கூட்டி சென்றது.
5.அடுத்து மீண்டும் கில்லி படத்தில் அடுத்த கட்டத்திற்கு சென்ற விஜய், ஆதி படத்தில் அதீத ஆக்சன் காட்சிகளால் மாட்டிக்கொண்டு பிளாப் ஆனார்.
6.அதே ஓவர் ஆக்சன் காட்சிகளால் பிளாப் ஆன படங்கள் தான், குருவி மற்றும் வில்லு போன்ற படங்கள்
7.இவரது சினிமா வாழ்க்கையிலேயே மிகப்பெரிய பிளாப் படம் இந்த சுறா படம். விஜய் ரசிங்கர்களே இந்த படத்தின் பெயரை சொன்னால் கடுப்பாகும் அளவிற்கு சென்றவிட்டது இந்த படம்.
8.எம்.ஜி.ஆரின் பெயரை வைத்த வேட்டைக்காரன் திரைப்படமும் அவரது ரசிகர்களுக்காக எடுக்கப்பட்டு பிளாப் ஆனது.
9.மீண்டும் மீண்டும் சாகசம் செய்து நாட்டைக் காப்பாற்றும் கதையால் அவரது இன்னொரு படம் வேளாயுதமும் பிளாப்பிற்கு பலியானது.
10.தலைவா படம், நல்ல கதை மற்றும் நடிப்பில் வெளிவந்தது. ஆனால் சில அரசியல் காரணங்களால் ஒரு வாரம் தள்ளி வெளியிடப்பட்டு படம் பிளாப் ஆக்கப்பட்டது. சாதாரண நடிகர் விஜயை ஒரு பெரிய தலைவன் விஜயாக மாற்றிய படம் தலைவா.
11.குழந்தைகளை திருப்திபடுத்த எடுக்கப்பட்டது புலி படம். ஆனால், கதையிலும் வசூலிலும் பெருத்த ஆதி வாங்கி பிளாப் ஆனது.
12.பெரும் எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்தி வசூலில் சோபித்தாலும், கதையாக ஒரு சாதாரண மனிதனுக்கு செல்ல முடியாத, விஜயை பெரிய ஒரு தலைவனாக காட்ட மட்டுமே எடுக்கப்பட்டு பிளாப் ஆன படம் பைரவா.
13.அழகிய தமிழ்மகன் - விஜய் முதன் முறையாக இரட்டை வேடத்தில் நொறு நெகட்டிவ் ரோல் செய்த படம் இது. பல விஜய் ரசிகர்ககுக்கு இந்த படம் பிடித்திருந்தாலும், இந்த படமும் பிளாப் என்பது ஒரு கசப்பான உண்மை.
14.வில்லு - காமெடியில் சற்று சோபித்த படமாக இது வந்தாலும், ஓவர் ஆக்சன் காட்சிகள் பலவற்றை கொண்டு வந்தது இந்த படம். இவற்றை எல்லாம் எம்.ஜி.ஆர் காலத்திலேயே பார்த்து பழகிப்போன சினிமா ரசிகர்கள் இந்த படத்தை பிளாப் ஆக்கி விட்டனர்.






