நான் விஜய் நண்பன்னு தெரிஞ்சும் அஜித் என்கிட்டேயே அத சொன்னாரு – அத போய் விஜய்கிட்ட சொன்னா அவன் சிரிக்கிறேன் – சஞ்சீவ் பேட்டி.

0
7056
Vijay
- Advertisement -

தமிழ் சினிமாவில் ரஜினி மற்றும் கமலுக்கு பின்னர் இரு துருவங்களாக இருந்து வருவது விஜய் மற்றும் அஜித் தான். இவர்கள் இருவருக்குமே கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான். அதேபோல துறை ரீதியாக இவர்கள் இருவருக்கும் பல போட்டிகள் இருந்தாலும் தனிப்பட்ட முறையில் விஜய் மற்றும் அஜீத் இருவருமே நல்ல உறவில் தான் இருந்து வருகிறார்கள். அவ்வளவு ஏன் சமீபத்தில் நடந்த மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கூட ‘நண்பர் அஜித்தைப் போல போலாம்’ என்று விஜய் கூறியது அஜித் ரசிகர்களை கவர்ந்து இருந்தது. இப்படி ஒரு நிலையில் விஜய் குறித்து அஜித் சொன்ன ஒரு சுவாரஸ்யமான விஷயம் குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார் நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பருமான சஞ்சீவ்.

-விளம்பரம்-

நடிகர் சஞ்சீவ் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை, இவர் விஜய்யின் நெருங்கிய நண்பர் என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான்.நடிகர் சஞ்சீவ் 1989 ஆம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளியான பொன்மனச் செல்வன் என்ற படத்தில் அறிமுகமானார் அதன்பின்னர் சந்திரலேகா நிலாவே வா, பத்ரி போன்ற பல்வேறு படங்களில் துணை நடிகராக நடித்து இருந்தார். தற்போது நீண்ட வருடங்களுக்கு பின்னர் விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் இணைந்து நடித்திருக்கிறார் சஞ்சீவ்.என்னதான் விஜய்க்கு நெருங்கிய நண்பர் என்றாலும் விஜயிடம் இதுவரை தொழில் ரீதியாக எந்த ஒரு உதவியையும் கேட்டதில்லை சஞ்சீவ். ஆனால், நட்பு ரீதியில் கேட்காமல் பல உதவிகளை செய்துள்ளாராம் விஜய்.

இதையும் பாருங்க : ஒரு நாளைக்கு 100 ரூபா குடுத்தா போதுமா – அர்ச்சனாவை பிராங்க் செய்துள்ள பா ரஞ்சித். அரிய வீடியோ இதோ.

- Advertisement -

சினிமா வட்டாரங்களில் நடிகர் விஜய்யை பற்றி இவரை விட யாருக்கும் அதிகம் தெரியாது என்று தான் சொல்ல வேண்டும். இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சஞ்சீவ், அஜித்தை சந்தித்த போது அவர் விஜய் குறித்து பேசியதை சொல்லியுள்ளார். அதில் பேசியுள்ள அவர், பெயருக்கு ஏற்றார் போல அவர் தல தான். அவர் மிகவும் தைரியமான நபர் யாரைப் பற்றியும் எதைப் பற்றியும் கவலை கிடையாது எனக்கு என்ன எழுதி இருக்கிறது அது எனக்கு கிடைக்கும் அதை யாராலும் தடுக்க முடியாது என்ற எண்ணம் கொண்டவர்.ஒருமுறை நான் ஸ்ரீநாத்தும் அவரை சந்திக்க சென்றிருந்தேன்.

அப்போது அவர் எங்களை மிகவும் நன்றாக வரவேற்றார். நானும் ஸ்ரீநாத்தும் விஜய்யின் நெருங்கிய நண்பர்கள் என்பது அவருக்கு தெரியும். தெரிந்தும் எங்களுக்கு குடிக்க ஜூஸ் எல்லாம் கொடுத்துவிட்டு குடிக்கும் போது அவர் என்னிடம் சொன்னார். என் வாழ்க்கையில் ஒரே ஒரு லட்சியம் தான். உங்கள் நண்பனை ஜெயிக்க வேண்டும் என்பதுதான். உங்க நண்பனை தூக்கிக் போட்டு நான் செல்கிறேன் நீங்க வேணா பாருங்க என்று சொன்னார். இந்த விஷயத்தை நான் விஜய்யிடம் சொன்ன போது அவன் சிரிக்கிறான் என்னதான் இருந்தாலும் அவர் அப்படி சொன்னது சூப்பர் தானே என்று சொன்னான் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement