விஜய் குறித்து போட்ட ட்வீட் – ரஜினி ரசிகர்களால் டெலீட் செய்த சஞ்சீவ். அப்படி என்ன போட்டார்.

0
4165
sanjeev
- Advertisement -

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் தமிழில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவருக்குப் பின்னர் சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் யாருக்கு செல்லப் போகிறது என்பதுதான் மிகப் பெரிய கேள்வியே. தற்போது இருக்கும் தலைமுறையில் விஜய் மற்றும் அஜித் தான் அந்த இடத்திற்கு தகுதியுடையவர்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இதில் யார் தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் என்பதுதான் மிகப்பெரிய கேள்வியாக இருந்துவருகிறது.

-விளம்பரம்-

இந்த நிலையில் விஜய்யை சூப்பர் ஸ்டார் என்று குறிப்பிட்டு பின்னர் ரஜினி ரசிகர்களின் எதிர்ப்பால் அந்த பதிவை நீக்கி இருக்கிறார் நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பருமான சஞ்சீவ். மிகவும் முக்கியமான நபர் என்றால் நடிகர் சஞ்சீவ்வை சொல்லலாம். விஜயின் நெருங்கிய நண்பர் சஞ்சீவ்.விஜயுடன் பல்வேறு படங்களில் நடித்தவர். மேலும், விஜயின் வாழ்க்கையில் நடந்த ஒரு சில முக்கிய நிகழ்வுகளில் எப்போதும் அவருடன் இருந்தவர்.

- Advertisement -

திரைப்படங்களை தாண்டி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “திருமதி செல்வம் ” தொடரில் செல்வம் என்ற கதாபாத்திரத்தின் மூலம் குடும்ப ரசிகர்களையும் கவர்ந்தார். அதே போல கடந்த சில நாட்களாக விஜயுடன் எடுத்த சில வின்டெக் புகைப்படங்களை பகிர்ந்து இருந்தார். இந்த நிலையில் மாஸ்டர் படப்பிடிப்பில் ரசிகர்களை சந்திக்க விஜய் வேன் மீது ஏறி கூலிங் கிளாஸை போட்டு கொண்டு ஒரு நிமிஷம் என்று சைகை காட்டி விட்டு செல்ஃபீ எடுத்துக் கொண்டார். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி படு வைரலானது .

இதை ரசிகர்கள் #ThalapathyVijaySelfie என்ற ஹேர்டேக் செய்து கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இந்த நிலையில் விஜய் எடுத்த செல்பி ஒன்று கூட செம்ம வைரல் ஆனது, அந்த செல்பி தற்போது வரை 1 லட்சம் RT இருந்தது. இதனை குறிப்பிடும் வகையில் நடிகர் சஞ்சீவ், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்திருந்தார்.

-விளம்பரம்-

அதில், அவர் அமைதியாக தான் இருக்கிறார், நீங்கள் தான் அவரை சூப்பர் ஸ்டார் ஆகிட்டிங்க என்று பதிவிட்டிருந்தார். விஜய்யை நடிகர் சஞ்சீவ் ‘சூப்பர் ஸ்டார்’ என்று குறிப்பிட்டதால் சஞ்சீவின் இந்த பதிவிற்கு ரஜினி ரசிகர்கள் விமர்சனத்தை முன்வைத்து வந்தனர். இதனால் தனது பதிவை நீக்கிவிட்டார் சஞ்சீவ். இருப்பினும் அவர் போட்ட பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement