வாத்தி கமிங் பாடலின் இந்த காட்சியில் பின்னாடி இருக்கும் சுவரொட்டியை கவனிசீங்களா.

0
14144
master
- Advertisement -

உலகில் அளவில் ரசிகர்கள் படையை கொண்டவர் தளபதி விஜய். கடந்த ஆண்டு அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படம் ரசிகர்கள் மத்தியில் வெறித்தனமாக தெறிக்க விட்டது. பிகில் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அவர்கள் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “மாஸ்டர்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து வருகிறார். இதனாலே படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தில் இவர்களுடன் மாளவிகா மோகன், சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி கிஷண் என்று பலர் நடிக்கின்றனர்.

-விளம்பரம்-

மேலும், விஜய்யின் நண்பர்களும் நடித்துள்ளனர். தளபதி விஜய் அவர்கள் சினிமா உலகத்திற்கு வரும் முன்னரே நண்பர்களாக இருந்தவர்கள் இருந்தவர் சஞ்சீவ் இவர் தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். இதே போல நடிகர் ஸ்ரீமன், சஞ்சீவ் மற்றும் ஸ்ரீநாத் மூவரும் விஜய் அவர்களுடன் அந்த காலம் தொட்டு நண்பராக இருந்து வருகிறார். இதில் ஸ்ரீமண் மற்றும் சஞ்சீவ் விஜய்யின் பல்வேறு படங்களில் நடித்துள்ளனர். அதே போல ஸ்ரீநாத், விஜய் நடிப்பில் வெளியான நாளைய தீர்ப்பு படத்திலும் வேட்டைக்காரன் படத்திலும் நடித்துள்ளார்.

- Advertisement -

தற்போது இவர்கள் மூவரும் விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் வாத்தி கமிங் பாடல் வெளியாகி இருந்தது. குட்டி ஸ்டோரி பாடலை போல இந்த பாடலும் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பாடலில் படத்தின் சில விஜய் புகைப்படங்களும் வெளியாகியுள்ளது ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அமைந்துள்ளது. இந்த நிலையில் இந்த படத்தில் விஜய் மற்றும் விஜய் நண்பர்களின் கதாபாத்திரம் என்னவாக இருக்கும் என்ற ஒரு கேள்வியும் எழுந்துள்ளது.

Image result for vijay friends in master

-விளம்பரம்-

வாத்தி கம்மிங் பாடலில் ஒரு காட்சியில் நடிகர் விஜய் மற்றும் அவரது நண்பர்கள் நடனமாடும் ஒரு புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. அந்த புகைப்படத்திற்கு பின்னால், Alumini Reunion அதாவது முன்னாள் மாணவர்களின் சந்திப்பு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இந்த படத்தில் விஜய் மற்றும் அவரது நண்பர்கள் முன்னாள் மாணர்வர்களாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது. ஏற்கனவே இந்த படத்தில் நடிகர் விஜய் மாணவர் சங்க தலைவர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று கிசுகிசுக்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement