தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் விஜய் நேரில் சென்று நலத்திட்ட உதவிகளை வழங்கியிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில வாரங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் மழை பெய்ததால் மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கும் செய்திகள் தான் பகிரப்பட்டு வருகிறது. மிக்ஸாம் புயல் சென்னையே புரட்டி போட்டு இருந்தது. தற்போது அந்த நிலை மாறி மக்கள் தங்களுடைய இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டிருக்கிறார்கள்.
https://twitter.com/sunnewstamil/status/1741038308044701731
விஜய் நல திட்டம்:
https://twitter.com/prsekar05/status/1741030158965088430?s=48
இந்த நிகழ்வில் பல சுவாரசிய நிகழ்வுகள் அரங்கேறியது. அதில் ஒரு சில 2k கிட்ஸ் நிவாரண பொருட்களை வாங்காமல் விஜயுடன் Selfie மட்டும் எடுத்து சென்றனர். அப்போது விஜய் இது வேணாமா, சரி போ என்று சொன்னது படு Cuteஆக இருந்தது. அதே போல மூதாட்டி ஒருவர் விஜய் யார் என்று தெரியாமல் வேறு ஒரு நபரை கும்பிட்டார். அப்போது விஜய் ' அம்மா, இங்க வாங்க நான் தான் விஜய் என்று சிரிப்பை அடக்க முடியாமல் அவரை அழைத்தார்.
இதனை தொடர்ந்து 2k இளைஞர் ஒருவர் விஜயுடன் selfie எடுத்துவிட்டு நிவாரண பொருட்களை வாங்காமல் போனார். இதனால் கடுப்பான புஸ்ஸி ஆனந்த், இந்த இளைஞரை துரத்தி சென்றார். இதனை கண்ட விஜய், ஏன் இவ்வளவு பதட்டம் கொஞ்சம் சில், பண்ணுங்க தள்ளி நில்லுங்க என்பது போல கையால் செய்கை காட்டி மேடையில் இருந்த பரபரப்பை குறைத்தார். இப்படியாக பல சுவாரசியமான நிகழ்வுகள் நேற்று இந்த நிகழ்ச்சியில் அரங்கேறி இருக்கிறது.
https://twitter.com/vineethian/status/1741072900952895693?s=48
கொந்தளித்த புஸ்ஸி :
அதில் மற்றொரு விஷயம் என்னவெனில் இந்த விழாவிற்கு விஜய் அரங்கிற்குள் வர கதவு வழியாக வந்த போது அங்கே வெளியில் இருந்தவர்கள் சிலர் உள்ளே வரைப்பார்த்தனர். இதனால் விஜய் உள்ளே நுழையும் முன்பே புஸ்ஸி ஆனந்த் பக்கத்தில் இருந்த நபர் கதவை சாத்தினார். இதனால் விஜய் முதுகில் கதவு பட்டு அவர் நிலை தடுமாறி கீழே விழ பார்த்தார். இதனால் பதறிய புஸ்ஸி ஆனந்த், கதவை முடிய அந்த நபரின் முதுகில் ஓங்கி தாக்கி ' பாத்து மூட மாட்டியா' என்று கோபத்தில் கத்தினார்.





