கத்தி படத்திற்கு விஜய் கொடுத்த பரிசு இது தான்.! பல வருட ரகசியத்தை சொன்ன அனிருத்.!

0
724
Anirudh

இசையமைப்பாளர் அனிருத் தற்போது உள்ள இளைஞர்களின் ட்ரெண்டிற்கேற்ப பாடல்களை கொடுத்து பலரது அபிமான இசையமைப்பாளராக இருந்து வருகிறார். மேலும் இவரது மெலோடி பாடல்கள் குத்து பாடல்கள் என்றாலும் சரி அனைத்துமே ஹிட் தான். 

மேலும் இவர் சூப்பர் ஸ்டாரின் உறவினர் என்பது அனைவருக்கும் தெரியும் . அதனால் தான் இவருக்கு பேட்ட படத்தில் கூட இசையமைப்பாளராகும் வாய்ப்பும் கிடைத்தது. அதே போல விஜய், அஜித், சூர்யா என்று அணைத்து முன்னணி ஹீரோக்களுக்கு ம்யூசிக் போட்டுள்ளார் அனி.

- Advertisement -

அந்த வகையில் நம்ம தளபதி விஜய்க்கு முதன் முதலில் கத்தி படத்தின் மூலம் தான் இசையமைத்திருந்தார் அனிருத். இந்த படத்தில் அனிருத் போட்ட bgm படத்திற்கு வேறு ஒரு மாஸை கொடுத்து என்று தான் கூற வேண்டும்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அனிருத், அவர் பயன்படுத்தும் பியானோ குறித்து ஸ்வாரஸிய தகவல் ஒன்றை கூறியுள்ளார். அது என்னவெனில், அந்த பியானோ நம்ம தளபதி விஜய் தான் கத்தி படத்திற்கு இசையமைத்ததற்காக பரிசாக அளித்தார் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement