‘கோட்’ படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் தான் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் பிளாக் பஸ்டர் ஹிட் தான். அந்த வகையில், சமீபத்தில் வெளியான நடிகர் விஜயின் ‘கோட்’ படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருக்கிறார். இப்படத்தை சுமார் 400 கோடி பட்ஜெட்டில் உருவாக்கி உள்ளார்கள்.
மேலும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி நடித்துள்ளார். பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, லைலா, யோகி பாபு என்ன பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளார்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளார்கள். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
கோட் படம்:
கதையில், கென்யாவில் ரயிலில் கொண்டு செல்லப்படும் யுரேனியத்தையும், தீவிரவாதி ஓவரையும் பத்திரமாக கொண்டு வர, SAT squad டீம் களம் இறங்குகிறது. அதில் விஜய் (காந்தி), அஜய் (அஜய்), பிரசாந்த் (சுனில்), பிரபுதேவா (கல்யாண்) ஆகியோர் ஆயுதங்களுடன் களம் இறங்குகிறார்கள். அந்த சண்டையில் ரயில் வெடித்து தீவிரவாதி மோகன் (மேனன்) இறந்து விடுவதாக காட்டப்படுகிறது. இதற்கிடையே, தாய்லாந்துக்கு தனது மனைவி (சினேகா) உடன் காந்தி செல்கிறார். அங்கு, காந்தி தனது மகனை பறி கொடுப்பதாக காட்டப்படுகிறது.
கோட் கதை:
ஆனால் கடைசியில், தனது மகனை காந்தி ஒரு பிரச்சனையில் சந்திக்கிறார். அந்தப் பிரச்சனை என்ன? காந்திக்கு வில்லனாக ஜீவன் (விஜய் மகன்) மாறியது எப்படி? என்பதுதான் படத்தின் மீதி கதை. நீண்ட நாட்களாக சீரியஸான ரோல்களில் தோன்றிய விஜய், இந்த படத்தில் காதல், காமெடி, கிண்டல், எமோஷன், சைலன்ட், டான்ஸ், டயலாக் டெலிவரி என அனைத்திலும் தெரிவிக்கப்பட்டுள்ளார். குறிப்பாக விஜய்யின் ஸ்கிரீன் பிரசன்ஸ் அனைவருக்கும் ஒரு கூஸ்பம்ஸாக இருக்கிறது.
படத்தின் விமர்சனங்கள்:
சிறிய வயது விஜயை காட்டிய டி- ஏஜிங் டெக்னாலஜியில் சில குறைபாடுகள் இருந்தாலும், அந்த கதாபாத்திரத்தில் விஜய் தன் நடிப்பால் அதை சரி செய்துள்ளார். ஆனால், படத்தின் கதை மிகவும் பழைய கதை என்பது போல் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. அதேபோல் இந்த படத்திற்கு எதற்கு டபுள் ஆக்சன். அதனால் ஒரு சுவாரசியமும் இல்லை எனவும் கூறி வருகிறார்கள். மேலும், படத்தின் உண்மையான வில்லனே, யுவன் தான். படத்தில் பாடல்களும் சரியில்லை, பின்னணி இசையும் சரி இல்லை என்று கூறி வருகிறார்கள்.
வசூல் சாதனை:
அதோடு இந்த படத்தை மூன்று மணி நேரம் எடுத்து வைத்து இருக்கிறார்கள். படத்தின் நீளம் சிறிது கம்மி சேர்த்து இருந்தால், நன்றாக இருந்து இருக்கும் என்றவாறு விமர்சனங்கள் வந்துள்ளது. இப்படி கலவையான விமர்சனங்கள் பெற்றிருந்தாலும், இப்படம் உலக அளவில் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் ரூபாய் 95 கோடி முதல் ரூபாய் 100 கோடி வரை வசூல் செய்துள்ளது என சொல்லப்படுகிறது. முதல் நாளே ரூபாய் 100 கோடி வரை பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்துள்ள நிலையில், இனிவரும் நாட்களில் இப்படத்தின் வசூல் பல சாதனைகளைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.