வடிவேலு, சிம்புவ விடுங்க, இவங்களுக்கு எல்லாம் முன்னாடியே Red Card வாங்கியுள்ள விஜய் பற்றி தெரியுமா ?

0
813
vijay
- Advertisement -

தமிழ் சினிமாவில் ரெட் கார்டு வாங்கிய நடிகர் என்றால் நம்மில் பெரும்பாலோனுருக்கு வடிவேலு – சிம்பு இருவர் தான் தெரியும். ஆனால், இவர்களுக்கு எல்லாம் முன்னரே விஜய்க்கு போடப்பட்ட ரெட் கார்டு பற்றி தெரியுமா ? தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்ந்தவர் வி சேகர். இவர் அதிகம் குடும்ப படங்களை தான் இயக்கி இருந்தார். அதிலும் இவர் இயக்கிய குடும்ப படங்கள் எல்லாம் பல நடிகர்கள் நடித்த நடுத்தர குடும்ப கதை படங்கள். 1990 ஆம் ஆண்டு வெளிவந்த நீங்களும் ஹீரோ தான் என்ற படத்தின் மூலம் தான் இவர் இயக்குனராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் பல படங்களை இயக்கி இருக்கிறார். கடைசியாக இவர் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த சரவணப்பொய்கை என்ற படத்தை இயக்கி இருந்தார்.

-விளம்பரம்-

இந்த படத்தில் இவருடைய மகன் கால் மார்க்ஸ் தான் ஹீரோவாக நடித்திருந்தார். இந்நிலையில் சமீபத்தில் இயக்குனர் வி சேகர் அவர்கள் பேட்டி ஒன்று கொடுத்திருந்தார். அதில் அவர் பாலசந்தர் குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, பெப்சியில் பாலச்சந்தர் சார் தலைவராக இருக்கும் போது நான் துணைத் தலைவர். அப்போது என்னுடைய ஷூட்டிங்கை 8 நாள் நிறுத்தி வைத்து இருந்தார். ஒரு சின்ன கருத்து வேறுபாட்டால் பிரச்சனை வந்தது.

- Advertisement -

பெப்சி பிரச்சனை:

பின் பெப்சி தென்னிந்தியாவாக இருப்பதைவிட தமிழ்நாடு என்று மாற்ற அக்ரிமெண்ட் போட்டோம். ஆனால், அதை பண்ண முடியாமல் போனது. அப்படியே சந்திரசேகர் சாருக்கும் அவருக்கும் ஏதோ ஒரு சின்ன பிரச்சனை இருந்தது. அப்போது விஜய் கால்ஷீட் விஷயத்தில் விஜய்க்கு ரெட் என்று போட்டுக் கொடுத்துவிட்டார் பாலசந்தர். விஜய்க்கு ரெட் அடிக்கறதுக்கு நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் இருக்கு. அதை ஏன் பெப்ஸி செய்யணும் என்று நான் கேட்டேன்.

வி.சேகர் பட ஷூட்டிங்கை நிறுத்திய கே.பாலசந்தர்:

அதற்கு அவர் இதை நான் செய்யவில்லை. துணைத்தலைவர் எல்லாம் சேர்ந்து எடுத்த முடிவு என்று சொன்னார். நான் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. உடனே அவர் சொன்னதற்கு நான் மறுப்பு தெரிவித்தேன். அப்போது தான் அவர் என்னுடைய படத்தை எட்டு, பத்து நாட்கள் தள்ளி வைத்துவிட்டார். இது குறித்து சினிமாவில் இருந்த பல இயக்குனர்கள் எல்லோரும் என்னிடம் நீங்க அவர் மீது பேட்டி கொடுங்கள் என்று சொன்னார்கள்.

-விளம்பரம்-

கே.பாலசந்தர் இறப்பதற்கு முன் சொன்னது:

ஆனால், நான் கொடுக்க முடியாது என்று சொல்லிவிட்டேன். ஏன்னா, அவர் குரு இடத்தில் இருந்து என்னை வழி நடத்தியவர். அவர் மீது பேட்டி கொடுக்க எனக்கு விருப்பமில்லை. அப்புறமாக நானே 12 பேர் சேர்ந்து கையெழுத்து போட்டு கொடுத்தோம். அதுக்குப் பிறகுதான் இந்த பிரச்சனை தீர்ந்தது. அதேபோல் பாலசந்தர் இறப்பதற்கு முன் அவரை பார்க்க நான் போயிருந்தேன். அவர் எல்லாமே பொய் என்று மனம் வெறுத்து பேசியிருந்தார். அவர் நம்பியவர்கள் எல்லாம் அவரை ஏமாற்றி இருந்தார்கள். அதனால் அவர் மனம் வெறுத்து விட்டார் என்று கூறி இருக்கிறார். இப்படி இவர் பேசிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

கே.பாலசந்தர் நினைவு:

தமிழ் சினிமா உலகில் இயக்கத்தின் இமயம் கே பாலச்சந்தர். இவர் மேடை நாடகத் துறையில் இருந்து சினிமா துறைக்கு வந்தார். 1965-ஆம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான நீர்க்குமிழி என்ற படத்தின் மூலம்தான் இவர் இயக்குனர் ஆனார். அதோடு தமிழ் சினிமா உலகில் முக்கிய நடிகர்களான கமல்ஹாசன், ரஜினி போன்ற கலைஞர்களை சினிமா உலகிற்கு தந்தவர். இவர் மண்ணுலகை விட்டு நீங்கினாலும் என்றென்றும் சினிமா உலகில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.

Advertisement