தளபதி விஜய்க்கு ஆஸ்கர் விருது கிடைப்பது குறித்து பிரபல தயாரிப்பாளர் பேசி இருக்கும் கருத்து தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. கடைசியாக விஜய் நடித்த மாஸ்டர் படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று இருந்தது. இதை தொடர்ந்து தற்போது விஜய் அவர்கள் நெல்சன் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து இருக்கிறார். மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ஆம் தேதி உலகமெங்கும் வெளியிடப்பட்டு இருந்தது.
இந்த படத்தில் விஜய் ‘வீர ராகவன்’ என்ற பெயரில் நடித்து இருக்கிறார். படத்தில் ஒரு மால்-லை பயங்கரமான தீவிரவாதிகள் ஹைஜாக் பண்ணுகிறார்கள். எதர்ச்சையாக கடத்தப்படும் மால்-லில் விஜயும் சிக்கிக் கொள்கிறார். விஜய், மால்-லையும், மக்களையும் எப்படி காப்பாற்றினார்? இதன் பின்னணி என்ன? என்பது தான் படத்தின் மீதி கதை. பல எதிர்பார்ப்புடன் வெளிவந்த பீஸ்ட் படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் தான் என்று கூறி இருக்கிறார்கள். பீஸ்ட் படம் வெளியாகி நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று இருந்தது .
பீஸ்ட் வசூல் சாதனை:
அதுமட்டும் இல்லாமல் விஜய் இந்த படத்துக்கு எப்படி ஓகே சொன்னார்? என்று பலரும் கேள்வி எழுப்பி இருந்தார்கள். மேலும், இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறி உள்ளது என்று கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் விஜய்யின் திரைவாழ்க்கையில் இப்படம் தோல்வியாக அமைந்துள்ளது. இப்படி எக்கச்சக்கமான நெகட்டிவான விமர்சனங்கள் பீஸ்ட் பெற்று இருந்தாலும் வசூலில் சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது. முதல் நாள் வசூலில் முந்தைய படங்களின் சாதனையை பீஸ்ட் முறியடித்து உள்ளதாக கூறப்படுகிறது.
‘தளபதி 66’ படம்:
தற்போது விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் ‘தளபதி 66’ என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. வம்சி தெலுங்கு சினிமா உலகில் முன்னணி இயக்குனர் ஆவார். மேலும், இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இயக்குனர் வம்சி- தயாரிப்பாளர் தில் ராஜூ இருவரும் இணைந்து பல படங்களில் பணிபுரிந்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க இருக்கிறார்.
தளபதி 66 படம் பற்றிய தகவல்:
சமீபத்தில் தான் இந்த படத்தின் பூஜை நடைபெற்றது. மேலும், இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ் போன்ற மூத்த நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்கள். தற்போது இந்த படத்தின் முதல் கட்ட பணி முடிவடைந்து அடுத்த கட்ட நிலைக்கு தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பிரபல மூத்த தமிழ் சினிமா தயாரிப்பாளர், விஜய் குறித்து பேசியிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மூத்த சினிமா தயாரிப்பாளராக இருப்பவர் அபிராமி ராமநாதன்.
விஜய் குறித்து அபிராமி ராமநாதன் கூறியது:
இவர் விஜய் குறித்து கூறியிருப்பது, விஜய்யின் உழைப்பின் மேல் நம்பிக்கை இருக்கிறது. அவர் படம் நநன்றாக இல்லை என்றாலும் மக்கள் அதனை ரசிக்கின்றனர். ஆஸ்கருக்கு போகக் கூடிய அளவிற்கு அவருக்கு திறமை இருக்கிறது. விஜய்க்கு ஆஸ்கர் கிடைத்தால் பெருமை தானே என்று தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன் பேசி இருக்கிறார். இப்படி இவர் பேசி இருப்பது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை விஜய் ரசிகர்கள் எல்லோரும் பயங்கர ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள்.