மெர்சல் படத்தின் போதே டான் படத்தின் கதையை கேட்டுவிட்டு விஜய் என்ன சொல்லியுள்ளார் பாருங்க.

0
305
don
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்து இருந்த படம் டாக்டர். நீண்ட இடைவெளிக்கு பிறகு சிவகார்த்திகேயன் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. ஆக்ஷனுக்கு இணையாக காமெடி காட்சிகள் படத்தில் இருந்தது. இந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயன் அவர்கள் டான் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்கி இருக்கிறார். மேலும், இந்த படத்தை லைகா தயாரிப்பு நிறுவனத்துடன் சிவகார்த்திகேயன் புராடெக்ஷன் இணைந்து தயாரித்து இருக்கிறது.

-விளம்பரம்-
Don': Director Cibi Chakaravarthy welcomes SJ Surya on the sets | Tamil  Movie News - Times of India

இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். டாக்டர் படத்தில் ஜோடியாக நடித்த பிரியங்கா அருள்மோகன் தான் இந்த படத்திலும் நடித்திருக்கிறார். இந்நிலையில் டான் படத்தை பற்றி முக்கிய தகவல்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி இருக்கிறது. அது என்னவென்றால், சிவகார்த்திகேயன் போலீஸ், டாக்டர் என பல கெட்டப்பில் நடித்திருந்தாலும் முதன் முதலாக காலேஜ் ஸ்டூடன்டாக டான் படத்தில் நடித்திருக்கிறார். சிவகார்த்திகேயன் அஜித்தின் ஏகன் படத்தில் தான் முதன் முதலாக அறிமுகமானார். அந்த படத்தில் அவர் காலேஜ் ஸ்டூடண்ட் ரோலில் நடித்திருந்து பலருக்கும் தெரியாத ஒன்று.

இதையும் பாருங்க : சீரியலில் இருந்து விலகப் போறீங்களா ? ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த ஆல்யா மானஸா.

- Advertisement -

அதோடு எடிட்டிங்கில் சிவா உடைய போர்ஷன் எல்லாம் எடுக்கப்பட்டது. ஆனால், டான் படத்தில் காலேஜ் ஸ்டுடென்ட் ஆக நடித்திருக்கிறார். மேலும், படத்தில் சிவகார்த்திகேயன் காலேஜ் ஸ்டுடென்ட் நடித்திருந்தாலும் காலேஜ் ஸ்டோரி அல்ல ஃபேமிலி டிராமா என்று இயக்குனர் கூறியிருக்கிறார். படத்தில் சிவகார்த்திகேயன் உடைய பெயர் சக்கரவர்த்தி என்று கூறப்படுகிறது. இயக்குனர் உடைய பெயரும் சக்கரவர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இயக்குனர் கௌதம் வாசுதேவ் இந்த படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார். சமீபகாலமாக பாடலாசிரியாக சிவகார்த்திகேயன் கலக்கிக் கொண்டு வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. அந்த வகையில் டான் படத்திலும் சிவா ஒரு டூயட் பாடலை எழுதி இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் டாக்டர் படம் மாபெரும் வெற்றி வசூலில் 100 கோடி அள்ளி குவித்து இருக்கிறது. இதனால் சிவா 100 கோடி கிளப்பில் இணைந்து இருக்கிறார். அதன் பிறகு வெளியாகும் முதல் படம் டான் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இயக்குனர் சிபி சக்கரவர்த்தி தன்னுடைய முதல் படமான டானிலேயே 5 இயக்குனர்களை வைத்து இயக்கி இருக்கிறார். டான் படத்தினுடைய பைலட் படத்தை மெர்சல் படத்தின் போது விஜய்க்கு சிபி சக்கரவர்த்தி காண்பித்திருக்கிறார். அதை பார்த்து விஜய் பாராட்டியிருந்தார் என்று கூறப்படுகிறது.

-விளம்பரம்-

எஸ் ஜே சூர்யா, கௌதம் வாசுதேவ், சிங்கம்புலி, மனோபாலா, சமுத்திரகனி ஆகியோர் ஆவர். அதோடு இயக்குனர் சிபி சக்கரவர்த்தி அட்லியின் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். இதனால் இவர் தெறி, மெர்சல் ஆகிய இரண்டு படங்களிலும் விஜயுடன் பணிபுரிந்து இருக்கிறார். சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் கலக்கிய சிவாங்கி இந்த படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமாகிறார். இவரை தவிர படத்தில் மிர்ச்சி விஜய், பாலசரவணன், காளி வெங்கட் என பல பேர் நடித்திருக்கிறார்கள். தற்போது டான் படத்தின் புதிய அப்டேட்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement