சீரியலில் இருந்து விலகப் போறீங்களா ? ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த ஆல்யா மானஸா.

0
277
alya
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் சமீப காலமாகவே சினிமா டைட்டல்களை மையமாக கொண்டு பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கிறது. கடைக்குட்டி சிங்கம் ஈரமான ரோஜாவே, நாம் இருவர் நமக்கிருவர் என்று சினிமா தலைப்புகளை வைத்து பல்வேறு சீரியல்கள் வந்தது. அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பான ராஜா ராணி தொடர் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்த சீரியலில் செம்பா என்ற கதாபத்திரத்தில் ஆல்யா மானசாவும் கார்த்தி என்ற கதாபாத்திரத்தில் சஞ்சீவ்வும் நடித்திருந்தனர்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 21-6199db57efd1b.webp

- Advertisement -

இந்த சீரியல் தொடங்கிய சில நாட்களிலேயே ஆலியா மானசா, சஞ்சீவ் ஆகிய இருவருக்கும் காதல் ஏற்பட்டது. பின் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணமான ஓராண்டிலேயே இந்த தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. சமீபத்தில் இவர்களது மகள் ‘அய்லா ‘வின் முதல் பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடினார்கள். இந்த நிலையில் ஆல்யா மானஸா இரண்டாம் முறையாக கர்ப்பமாக இருக்கிறார்.

ஆல்யா மானஸா கர்ப்பமாக இருந்தாலும் தற்போதும் தொடர்ந்து சீரியலில் நடித்து வருகிறார். மேலும், சமூக வலைதளத்தில் அடிக்கடி தனது டான்ஸ் வீடியோக்களை கூட பதிவிட்டு வருகிறார். ஆல்யா மானஸா இரண்டாம் முறை கர்ப்பமாக இருப்பதால் அவர் ‘ராஜா ராணி 2’ சீரியலில் இருந்து தற்காலிகமா விலகப்போகிறார் என்ற செய்திகள் வெளியானது. இந்த நிலையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார்.

-விளம்பரம்-

அப்போது ரசிகர் ஒருவர் ‘நீங்கள் ராஜா ராணி சீரியலில் இருந்து விலகப்போகிறீர்களா’ என்று கேட்டிருந்தார். அதற்கு ஆல்யா மானஸா ‘இல்லை அது உண்மை அல்ல’ என்று கூறியுள்ளார். மேலும், மற்றொரு ரசிகர் ‘முதல் குழந்தை சிசேரியன் பண்ணீங்க, அத பத்தி சொல்லுங்க’ என்று கேட்டற்க்கு ‘ஆமாம் முதல் குழந்தை சிசேரியன் தான். ஆனால், தற்போது நார்மல் டெலிவரிக்கு திட்டமிட்டு இருக்கிறேன், பாக்கலாம் ‘ என்று கூறியுள்ளார்.

Advertisement