நீண்ட வருடங்களுக்கு பின் கௌரவ தோற்றத்தில் விஜய்.! அதுவும் இந்த இயக்குனர் படத்திலே.!

0
1147
- Advertisement -

இளைய தளபதி விஜய் தனது தந்தை இயக்கிய படத்தின் மூலம் தான் சினிமாவில் கால் பதித்தார். அதன் பின்னர் தனது தந்தை இயக்கத்திலேயே பல்வேறு படங்களில் நடித்து வந்த விஜய் இடையில் சிறிது காலம் தனது தந்தை இயக்கத்தில் இருந்து வெளியே வந்தார்.

-விளம்பரம்-
Image result for Vijay in sukran

அதன் பின்னர் நீண்ட ஆண்டுகால இடைவேளைக்கு பின்னர் எஸ் ஏ சி இயக்கியத்தில் ரவி கிருஷ்ணா நடிப்பில் வெளியான சுக்ரன் படத்தில் விஜய், கௌரவ தோற்றத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் விஜய்யின் தந்தை மீண்டும் இயக்குனராக அவதாரமெடுத்துள்ளார்.

- Advertisement -

தமிழில் பல ஹிட் படங்களை இயக்கிய எஸ் ஏ சி இடைப்பட்ட காலமாக படம் இயக்குவதை நிறுத்தி.விட்டார் கடந்த 2015ஆம் ஆண்டு ‘டூரிங் டாக்கீஸ்’ என்ற படத்தில் நடித்து, தயாரித்து இயக்கினார். இதனையடுத்து ‘டிராஃபிக் ராமசாமி’, ‘கொடி’ உள்ளிட்ட சில படங்களில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார்.

Image result for Vijay and Jai

தற்போது மீண்டும் இயக்குநராகத் திரும்ப பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளார் எஸ்.ஏ.சி. அதில் ஜெய்யை ஹீரோவாக நடிக்கவைக்கப் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளதாகவும், இதில் விஜய் கௌரவ தோற்றத்தில் தோன்ற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-
Advertisement