கலைஞரை பார்க்க வந்த விஜய்..! மருத்துவமனையில் குவிந்த ரசிகர்கள்.! புகைப்படம் இதோ.!

0
816
Vijay
- Advertisement -

உடல் நல குறைபாட்டால் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கலைஞர் அவர்களை பல்வேறு அரசியல் பிரமுகர்களும் திரையுலக பிரபலங்களும் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விஜய், கலைஞர் அவர்களை சந்திக்க காவேரி மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

-விளம்பரம்-

Actor vijay

- Advertisement -

கடந்த 5 நாட்களுக்கு முன்னர் உடல் நல குறைபாட்டால் கலைஞர் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதல் இரண்டு நாட்கள் உடல் நிலை குறித்து எந்த ஒரு தகவலும் வெளிவராத நிலையில் கலைஞர் அவர்களின் உடல் நிலை குறித்து சில வதந்திகளும் வந்த வண்ணம் இருந்தது. ஆனால், இரண்டு நாட்களுக்கு முன்னர் அவர் நலமுடன் இருப்பதாக காவேரி மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.

இதையடுத்து கலைஞர் அவர்களை பல்வேறு நடிகர்களும் காவேரி மருத்துமனைக்கு சென்று சந்தித்து வந்த வண்ணம் இருந்தன. சமீபத்தில் நடிகர்களில் சூர்யா, சிவகுமார், ரஜினி உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்து வந்தனர். இந்நிலையில் சமீபத்தில் நடிகர் விஜய் காவேரி மருத்துவமனைக்கு நேரில் சென்று கலைஞர் அவர்களின் உடல் நிலை குறித்து நலம் விசாரித்துள்ளார்.

-விளம்பரம்-

vijay-actor

vijay

கலைஞர் அவர்களுக்கும் நடிகர் விஜக்கும் ஒரு இணைபிரியா பந்தம் இருக்கிறது. நடிகர் விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் கலைஞர் அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர். நடிகர் விஜய் நடித்த ‘தலைவா’ படம் வெளியாவதில் பிரச்சனை இருந்து போது விஜய்க்கு ஆதரவாக கலைஞர் அறிக்கை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement