மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருக்கு இறுதி அஞ்சலி செலுத்திய தளபதி விஜய். வைரலாகும் வீடியோ

0
525
- Advertisement -

கன்னட திரையுலகில் பவர் ஸ்டாராக கொடி கட்டி பறந்தவர் புனீத் ராஜ்குமார். கன்னட மொழியில் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் படையே உள்ளது. இவர் நடிகர் மட்டும் இல்லாமல் பாடகர், தயாரிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகங்களில் பணிபுரிந்து வந்தார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளது. இவர் கடைசியாக நடித்த ‘யுவரத்னா’ படம் மிகப்பெரிய அளவில் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது. இப்படி ஒரு நிலையில் கடந்த வருடம் இவர் காலமான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. புனித் ராஜ்குமார் அவர்கள் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது திடீரென்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

-விளம்பரம்-

உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் புனித் ராஜ்குமார் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின் புனித் ராஜ்க்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து இருந்தார்கள். மேலும், இவருடைய உடல் நலம் சீக்கிரம் குணமடைய வேண்டும் என்று பிரபலங்களும், ரசிகர்களும் பிரார்த்தனை செய்து வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புனித் ராஜ்குமாரின் மறைவிற்கு பல பிரபலங்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இவர் நடிகராக மட்டுமல்லாமல் 15 பள்ளிகளை நடத்தி அதில் அனைவருக்கும் இலவச கல்வியை கொடுத்திருக்கிறார்.

- Advertisement -

புனித் செய்த சமூக சேவைகள்:

அதே போல 16 முதியோர் இல்லங்கள், 19 கோசாலை போன்றவை தன்னுடைய சொந்தப் பணத்திலேயே மக்களுக்கு உதவி செய்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவர் 1800 மாணவர்கள் படிப்பதற்காக கல்வி வழிவகை செய்துள்ளார். இப்படி இலவச பள்ளிகள், அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்கள் என கர்நாடக மக்களுக்காக இவர் பல்வேறு உதவிகளை செய்துள்ளார். அவ்வளவு ஏன் இறுதியாக அவர் இறந்த போது கூட அவர் கண்ணை தானாம் செய்துவிட்டு தான் சென்றார். அதுவும் அவர் தானமாக வழங்கி சென்ற கண்கள் மூலம் 4 பேருக்கு பார்வை கிடைத்துள்ளது.

புனீத் ராஜ்குமாருக்கு இறுதி அஞ்சலி:

இப்படி புனித் ராஜ்குமாரின் மறைவு கன்னட திரையுலகில் மட்டுமில்லாமல் இந்திய திரையுலகினர் அனைவருக்குமே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. மேலும், அவருடைய மறைவிற்கு பின் பல திரையுலக பிரபலங்கள் அவரின் நினைவிடத்திற்கு சென்று தங்களுடைய அஞ்சலியை செலுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது நடிகர் விஜய் அவர்கள் தன்னுடைய இறுதி அஞ்சலியை புனீத் குமாருக்கு செலுத்த அவருடைய நினைவிடத்திற்கு சென்று உள்ளார். புனித் ராஜ்குமாரின் நினைவிடத்திற்கு விஜய் சென்றுள்ள வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.

-விளம்பரம்-

விஜய் செலுத்திய இறுதி அஞ்சலி :

அதில், விஜய் அவர்கள் புனித் ராஜ்குமாருக்கு கற்பூர ஆரத்தி காண்பித்து, அவருடைய புகைப்படத்தை தொட்டு வணங்கி தன்னுடைய இறுதி அஞ்சலியை செலுத்தி இருக்கிறார். தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் தளபதி விஜய். மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் அவர்கள் தற்போது பீஸ்ட் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது.

பீஸ்ட் படம் பற்றிய தகவல்:

மேலும், இவர்களுடன் இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து இருக்கிறார். இந்த படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த படத்தின் அரபிக்குத்து பாடல் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகி இருந்தது. மேலும், இந்த பாடல் வெளியானதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதோடு உலகம் முழுவதும் தற்போது விஜயின் அரபி குத்து பாடல் தான் ஒலித்துக்கொண்டு இருக்கிறது. ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் அரபிக்குத்து பாடலுக்கு நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

Advertisement