விஜய் கலந்துகொண்ட திருமணத்தில் கீர்த்தி, அட்லீ, வரலக்ஷ்மி.! யார் விஜய்யின் அந்த வி ஐ பி.!

0
980
- Advertisement -

தளபதி விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் தனது 63-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்து வருகிறார். ஏ ஜி எஸ் தயாரித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் படு மும்முரமாக நடந்து வருகிறது.

-விளம்பரம்-

கடந்த 2 மாதத்திற்கு முன்னர் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் சென்னையிலுள்ள பிரபல பின்னிமில்லில் நிறைவடைந்தது தற்போது இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் நடந்து வருகிறது.

- Advertisement -

இந்த நிலையில் நடிகர் விஜய் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவிவருகிறது இந்த திருமணத்தில் இயக்குனர் அட்லி கீர்த்தி சுரேஷ் வரலட்சுமி போன்ற பலரும் கலந்து கொண்டனர்.

இத்தனை விஐபிக்கள் கலந்துகொண்ட திருமணம் யார் யாருடைய இது என்பதை விசாரிக்கையில் அது விஜயன் ஓட்டுநராக பணிபுரிந்து வரும் ராஜேந்திரன் என்பவரின் மகளின் திருமணம் என்று தெரியவந்தது இதனால் நடிகர் விஜய் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement