கையில் பேண்ட்டேஜ் வாக்கு போட வந்த போது சோர்வுடன் இருந்த காரணம் இதுதானா? விஜய்க்கு நடந்துள்ள விபத்து.

0
307
- Advertisement -

சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தல் வாக்குப்பதிவின் போது வாக்களிக்க வந்த விஜய்யின் கையில் இருந்த காயம் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. மிழ்நாடு முழுவதும் 543 தொகுதிகளுக்கான 18-வது மக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில் முதல் கட்டமாக தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகள் மற்றும் 19 மாநிலங்களில் 62 தொகுதிகள் என 102 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நேற்று முன் தினம தொடங்கியது. காலை 7 மணி முதலே வாக்கு பதிவுகள் துவங்கியது.

-விளம்பரம்-

இதில் மக்கள் அனைவரும் வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை பதிவு செய்து வந்தனர். அதே போல சினிமா பிரபலங்களும் காலை முதலே தங்கள் வாக்குகளை பதிவு செய்துவந்தனர். அந்த வகையில் நடிகர் அஜித் காலையிலேயே முதல் ஆளாக சென்று தனது வாக்கினை பதிவு செய்தார். அதே போல நடிகர் ரஜினி, விஜய், விக்ரம் என்று முன்னனி நட்சத்திரங்கள் பலரும் தங்கள் வாக்குகளை பதிவு செய்து வந்தனர்.

- Advertisement -

அங்கே தமிழக வெற்றிக் கழக தலைவராக தனது முதல் ஓட்டை பதிவு செய்தார். கடந்த முறை நடைபெற்ற தேர்தலில் நடிகர் விஜய் ஒரு இளம் பச்சை சட்டை அணிந்து கருப்பு மாஸ்க் அணிந்து தனது வீட்டில் இருந்து வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் சென்று இருந்தார். ஆனால், இந்த முறை வெள்ளை சட்டை அணிந்து எந்த வித ஆராவரமும் இல்லாமல் சென்று தனது வாக்கை செலுத்தி இருந்தார் விஜய்.

இது ஒருபுறம் இருக்க வாக்களிக்க வந்த போது நடிகர் விஜய் மிகவும் சோர்வுடன் காணப்பட்டார். மேலும், அவரது கையில் பேட்டேஜ் கூட போட்டிருந்தார் விஜய். இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல் என்னவெனில், நடிகர் விஜய் GOAT படத்திற்காக சமீபத்தில் ரஸ்யா சென்று இருந்தார் என்பது தெரிந்ததே. அங்கே படத்தின் பைக் சேஸிங் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்ட போது எதிர்பாராத விதமாக விஜய் ஓட்டி வந்த பைக் விபத்துக்குள்ளாகி இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த விபத்தில் விஜய்யின் கையில் மட்டுமல்லாது, பின் தலையிலும் கூட காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. விபத்து நடந்த உடன் உடனடியாக ரஷ்யாவில் உள்ள மருத்துவமனையில் விஜய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு இருக்கிறது. மேலும், அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள்அவரை ஒருவாரம் ஓய்வு எடுக்கச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், வாக்களிப்பதற்காக அவர் சென்னை திரும்பியிருக்கிறார். மேலும், பல மணிநேர விமான பயணம் என்பதால் ஓய்வில்லாமல் சோர்வாக அவர் இருந்தார் என்றும் சொல்கிறார்கள்.

கடந்த பிப்ரவரி மாதம் தான் நடிகர் விஜய் தனது கட்சிப் பெயரை அறிவித்து இருந்தார். மேலும், 2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் விஜய் போட்டியிடவில்லை. 2026 ஆம் ஆண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக தயாராகுவோம் என்று விஜய் சொல்லியிருக்கிறார். இப்படி முழு நேர அரசியலில் விஜய் ஈடுபட இருப்பதால் சினிமாவிலிருந்து விலகுவதாகுவதாகவும் அறிவித்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement