வசூலில் விஜய் தான் முதல் இடம்,பிறகு தான் ரஜினி – பிரபல விநியோகஸ்தர் புள்ளி விவரத்துடன் தகவல்

0
1363
- Advertisement -

தமிழ் சினிமாவில் கமர்சியலான படங்களில் கொடிகட்டி பறப்பவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இவருடைய கபாலி படம் தமிழ் சினிமாவின் அதிக வசூல் செய்த படமாக இருக்கிறது. இவருக்கு அடுத்து வசூல் மன்னனாக இருப்பவர் விஜய் தான் என்பது நிதர்சனமான உண்மை.

rajini kanth

தற்போது உள்ள சூழலில் ரஜினிகாந்தையும் விஜய் முந்திவிடுவார் என கூறிக்கொண்டிருக்கும் வேளையில் அது உண்மைதான் என திருப்பூரை சேர்ந்த விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் கூறியுள்ளார்.

- Advertisement -

இது குறித்து அவர் பேசியதாவது,

மெர்சல் படம் ஒரு மெகா ஹிட் படம். அது தோல்வி படம் என்று கூறுவது அனைத்தும் கட்டுக்கதை. கோயமுத்தூரில் மெர்சல் படத்தினை நான்தான் வெளியிட்டேன். அங்கு மட்டும் ஷேர் 12 கோடிக்கு போனது.

vijay

ஆனால் ரஜினியின் கபாலி படம் அங்கு வெறும் 7 கோடிக்கு தான் போனது. ராஜியின் எந்திரன் படம் மட்டுமே இதுவரை அவருக்கு 10 கோடிக்கு போயுள்ளது.

இந்த சாதனையை மெர்சல் படத்தின் மூலம் விஜய் முறியடித்த்துள்ளார். எனக் கூறினார் அவர்.

இதன் மூலம் ரஜினியையும் முந்திவிட்டார் விஜய் என்று கூறுவது உண்மையாகியுள்ளது.

Advertisement