கடைசி படத்தில் இந்தியாவில் எந்த நடிகர் செய்யாத சாதனையில் இடம்பிடிக்க இருக்கும் விஜய்?

0
447
- Advertisement -

தன்னுடைய கடைசி படத்துக்காக விஜய் வாங்க இருக்கும் சம்பளம் குறித்த விவரம் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டும் இல்லாமல் வசூல் சாதனையும் செய்து இருக்கிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட், வாரிசு ஆகிய படங்கள் பெரும் தோல்வியை தழுவியது.

-விளம்பரம்-

இருப்பினும் வசூல் ரீதியாக அந்த படங்கள் வெற்றி கண்டது. சமீபத்தில் லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் வெளியாகி இருந்தது. இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன் தாஸ், த்ரிஷா, மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து இருந்தார்கள். விஜய்யின் லியோ படம் உலக அளவில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்து மட்டும் இல்லாமல் திரை பிரபலங்கள் பலருமே பாராட்டி இருந்தார்கள். லியோ படத்தை தொடர்ந்து நடிகர் விஜய்யின் தளபதி 68-வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார்.

- Advertisement -

விஜய் கோட் படம்:

இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இந்த படத்தில் இணைந்திருக்கிறார். இந்த படத்தில் விஜய் அவர்கள் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், மோகன், அஜ்மல், வைபவ், பிரேம்ஜி அமரன், இவானா உட்பட பல பிரபலங்கள் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு கோட் G.O.A.T Greatest of all time என்று பெயரிடப்பட்டிருக்கிறது. தற்போது இந்த படத்தினுடைய வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

விஜய் நடிக்கும் கடைசி படம்:

இதை அடுத்து ஒரு படத்தில் மட்டும் விஜய் நடிக்க இருக்கிறார். ஆனால், அந்த படத்தை யார் இயக்குகிறார்கள்? என்ற தகவல் தெரியவில்லை. வெற்றிமாறன், எச். வினோத், லோகேஷ் என்று பல இயக்குனர்களின் பெயர்கள் அடிபட்டு வருகிறது. அது மட்டும் இல்லாமல் விஜயின் கடைசி படத்தை ஆர்ஆர்ஆர் படத்தை தயாரித்த நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில் அனைவரும் எதிர்பார்த்தபடி விஜய் அவர்கள் அரசியலில் களமிறங்கி இருக்கிறார். இவர் தன்னுடைய கட்சிக்கு தமிழக வெற்றிக் கழகம் என்று பெயர் வைத்திருக்கிறார். இது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

-விளம்பரம்-

விஜய் அரசியல்:

அது மட்டுமில்லாமல் அடிக்கடி விஜய் அவர்கள் ஆலோசனை கூட்டத்தையும் நடத்தி வருகிறார். 2026 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் தான் போட்டியிடுவதாகவும் விஜய் கூறியிருக்கிறார். இதனால் தன்னுடைய கட்சியில் புதிய உறுப்பினர் சேர்க்கைக்காக புதிய செயலியையும் அறிமுகப்படுத்தி இருக்கிறார். இதில் உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும், விஜய் அரசியலுக்கு வருவது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தினாலும் அவர் சினிமாவில் இருந்து விலக இருப்பது ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்திருக்கிறது.

விஜய் வாங்கும் சம்பளம்:

இந்த நிலையில் விஜய் வாங்க இருக்கும் சம்பளம் குறித்த விவரம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, விஜய் அவர்கள் ஜிஎஸ்டி உடன் சேர்த்து 150 கோடி சம்பளம் பெற்று வருகிறார். தற்போது கோட் படத்திற்காக இவர் 200 கோடி வாங்குகிறாராம். பின் அவருடைய கடைசி படத்துக்கு 250 கோடி கோடிகள் சம்பளமாக பேசப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இது எந்தளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால், விஜய் தன்னுடைய கடைசி படத்திற்கு 250 கோடி சம்பளம் வாங்கினால் இந்திய திரை உலகிலேயே அதிக சம்பளம் பெற்ற பெருமை விஜய்க்கு சேரும். இந்திய சினிமா உலகில் நடிகர்கள் மட்டும் இல்லாமல் இயக்குனர்கள் கூட யாரும் இந்த அளவிற்கு சம்பளம் வாங்கியதில்லை. அப்படி விஜய் வாங்கினால் அது அவருடைய சாதனை என்று சொல்லலாம்.

Advertisement