பெரும் எதிர்பார்புகளுக்கு மத்தியில் வெளியாகி படு தோல்வியடைந்த ஜில்லா படத்தின் Deleted காட்சி

0
1941
Jilla
- Advertisement -

விஜய்யின் ஜில்லா பட டெலீட் காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் வாரிசு. இந்த படத்தை வம்சி இயக்கி இருந்தார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர், பிரபு போன்ற பலர் நடித்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

தமன் இந்த படத்திற்கு இசை அமைத்து இருந்தார். குடும்ப பின்னணியை மையமாக கொண்ட கதை. இந்த படம் பொங்கல் விருந்தாக ரசிகர்களுக்கு வெளியாகி இருந்தது. மேலும், வாரிசு படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தாலும், உலக அளவில் 300 கோடிக்கும் மேல் அதிகமாக வசூல் செய்து இருந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி இருந்தது. இதனை அடுத்து தற்போது தளபதி விஜய்யை வைத்து “லியோ” என்ற படத்தை லோகேஷ் இயக்கி வருகிறார்.

- Advertisement -

விஜய் திரைப்பயணம்:

இதற்கு முன் லோகேஷ் அவர்கள் விஜய்யை வைத்து மாஸ்டர் என்ற படத்தை இயக்கி இருந்தார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன், மேத்திவ் தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது சென்னையில் மும்முரமாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

லியோ படம்:

இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த லியோ படத்தில் கிரிக்கெட் வர்ணனையாளர் முத்து நடிக்கிறார். இப்படி தொடர்ந்து பிஸியாக விஜய் நடித்து வருகிறார். இப்படி விஜய் நடிப்பில் வெளிவந்த படங்களில் ஒன்று தான் ஜில்லா. இந்த படத்தில் விஜய் மற்றும் மோகன்லால் இணைந்து நடித்திருந்தார்கள். இந்த படம் 2014 ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்த படத்தை ஆர் டி நேசன் என்பவர் இயக்கியிருந்தார். இந்த படத்தில் காஜல் அகர்வால், தம்பி ராமையா, பூர்ணிமா பாக்கியராஜ் ,மகத், நிவேதா தாமஸ், சம்பத் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள்.

-விளம்பரம்-

ஜில்லா படம் டெலீட் சீன்:

ஆனால், இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை. இருந்தாலும், படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. இந்நிலையில் ஜில்லா படத்தில் இருந்து டெலிட் செய்த காட்சி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. அதாவது, இந்த படத்தில் காஜல் அகர்வால்-விஜய் இருவரும் ஒன்றாக இணைந்து விஜயின் குடும்பத்தில் உள்ள அனைவரிடமும் பேசுவார்கள். அந்த காட்சி தான் படத்தில் டெலிட் செய்திருக்கிறார்கள். தற்போது இதை ரசிகர்கள் சோசியல் மீடியாவில் பகிர்ந்து வைரல் ஆக்கி வருகிறார்கள்.

தளபதி 68 படம்:

நடிகர் விஜய்யின் தளபதி 68-வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா தான் தளபதி 68 படத்திற்கு இசையமைப்பாளர் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த படம் மாநாடு படம் போல டைம் லூப் கதையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதோடு இந்த படத்திற்கு கதாநாயகியாக தமன்னா, கீர்த்தி செட்டி இடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. மேலும், ஜூன் மாதம் விஜயின் பிறந்தநாள் வருவதால் இந்த படத்தின் டைட்டிலையும் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகின்றனர்.

Advertisement