நண்பர்கள் கேங்குடன் ஜாலி ட்ரிப் சென்றுள்ள விஜய் – முதன் முறையாக புகைப்படத்தை வெளியிட்ட விஜய்யின் நண்பர்.

0
7257
sanjeev
- Advertisement -

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கி வரும் நடிகர் விஜய், அவரது அப்பா சந்திரசேகர் மூலமாக திரையுலகிற்கு வந்தாலும் தனது தனிப்பட்ட திறமையால் இன்று ஒரு உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார். விஜய்யை பொறுத்த வரை அவர் படப்பிடிப்பில் மிகவும் அமைதியாக இருப்பார். யாருடன் அவ்வளவாக பேச மாட்டார் என்று தான் அவருடன் பணியாற்றியவர்கள் கூறுவார்கள். ஆனால், விஜயின் மறுபக்கத்தை அறிந்திருப்பது அவர்களது நண்பர்கள் மட்டும் தான்.

-விளம்பரம்-

அதில் மிகவும் முக்கியமான நபர் என்றால் நடிகர் சஞ்சீவ்வை சொல்லலாம். விஜயின் நெருங்கிய நண்பர் சஞ்சீவ்.விஜயுடன் பல்வேறு படங்களில் நடித்தவர். மேலும், விஜயின் வாழ்க்கையில் நடந்த ஒரு சில முக்கிய நிகழ்வுகளில் எப்போதும் அவருடன் இருந்தவர். திரைப்படங்களை தாண்டி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “திருமதி செல்வம் ” தொடரில் செல்வம் என்ற கதாபாத்திரத்தின் மூலம் குடும்ப ரசிகர்களையும் கவர்ந்தார்.

- Advertisement -

விஜய்யின் நெருங்கிய நண்பர் என்பதால்,சஞ்சீவ் எந்த பேட்டியில் பங்குபெற்றாலும் அவரிடம் விஜய் குறித்த கேள்வி கண்டிப்பாக முன்வைக்கப்படும். அதே போல சஞ்சீவ் மற்றும் விஜய் இருவருமே பெரும்பலம் நேரில் சந்தித்துக்கொண்டாள் கூட படங்களை பற்றி அவ்வளவாக பேசுவதும் இல்லை. அவ்வளவு ஏன், நண்பனாக இருந்தாலும் இதுவரை விஜய்யிடம் பட வாய்ப்பு கூட கேட்டதில்லை நடிகர் சஞ்சீவ்.

Image

அந்த அளவிற்கு சினிமாவையும் தனிப்பட்ட நட்ப்பையும் மெயின்டெய்ன் செய்து வருகிறார் சஞ்சீவ். விஜய்யின் திரை துறை நண்பர்களிலேயே சஞ்சீவ்விற்கு தான் விஜய்யை பற்றி அதிகம் தெரியும், காரணம் விஜய் படித்த அதே கல்லூரியில் தான் சஞ்சீவ்வும் படித்தார்.கடந்த சில நாட்களாக நடிகர் சஞ்சீவ், விஜய்யின் சில அன்சீன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

-விளம்பரம்-

அதில் நண்பர்களுடன் 2014 ஆம் ஆண்டு ஜாலியாக ட்ரிப் சென்ற போது எடுத்த புகைப்படம் போன்று தெரிகிறது. அதே போல படத்தின் பின்னணியில் ‘மெக்ஸிகானோ’ என்று எழுதப்பட்டிருப்பதால், இது மெக்ஸிகோவில் எடுக்கப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.. அனைவரும் சால்வையோடு, தலையில் பெரிய தொப்பிகளையும் அணிந்துள்ளனர். விஜய் வெறும் சால்வையோடு, முகத்தில் புன்சிரிப்பை சிந்தியவாறு நிற்கிறார்

Advertisement