நடுத் தெருவில் நின்று, சாப்பாட்டுக்கு கையேந்தினேன் – ஊரடங்கில் சிக்கிய விஜய் மன்றத் தலைவி கண்ணீர் பேட்டி.

0
1594
Vijay
- Advertisement -

வெளியூர் சென்ற பல பேர் கொரோனா காரணமாக மாட்டிக்கொண்டு சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது வேண்டுதலுக்காக கோயிலுக்கு சென்ற விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிர் அணி தலைவி மற்றும் அவரது குடும்பத்தினர் தங்களுடைய சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் 42 நாட்கள் சிக்கித் தவித்து உள்ளார்கள். அவர்களுக்கு அரசாங்கமும் அதிகாரிகளும் உதவ முன் வரவில்லை. இளைய தளபதி விஜய்யின் தீவிர ரசிகர் ஒருவர் தான் இந்த குடும்பத்தை மீட்டுள்ளது. இது குறித்து விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிர் அணி தலைவி கூறியது, வெளிநாட்டுகளில் இருக்கும் இந்தியர்களை மீட்கும் அரசாங்கம் நாட்டுக்குள்ளே தவித்து வரும் மக்களை மீட்க யோசிக்கவில்லை.

-விளம்பரம்-
ஊரடங்கில் மாட்டிக்கொண்ட விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவி

நான் தளபதி விஜய்யின் தீவிர ரசிகை. அம்மா உணவகத்தில் நான் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன். கடந்த மாதம் தான் என் மகள் ரம்யாவுக்கு விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தலைமையில் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்தவுடன் நேர்த்திக்கடன் இருந்ததால் நாங்கள் மொத்தம் 11 பேர் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றோம். கோவிலுக்கு சென்ற அன்றே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் பஸ் எதுவும் ஓடவில்லை.

- Advertisement -

நாங்கள் சொந்த ஊருக்கும் போக முடியாமல் வேறு எங்கும் செல்ல முடியாமல் பஸ் ஸ்டாண்டில் நின்று விட்டோம்.நாங்கள் பல அதிகாரிகளிடம் உதவி கேட்டோம். உதவி செய்கிறோம் என்று கூறி கைவிரித்து விட்டார்கள். கையிலிருந்த பணத்தை வைத்து நாங்கள் நாட்கள் தள்ளினோம். தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு நீட்டித்துக் கொண்டே சென்றதால் நாங்கள் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் தவித்து வந்தோம். ஆதரவற்றோர் மற்றும் உடல் முடியாதவர்களுக்கு வழங்கப்பட்ட சாப்பாடு எல்லாம் நாங்கள் வாங்கி சாப்பிட்டு எங்களுடைய நாட்களை கடத்தினோம்.

விஜய் மக்கள் இயக்கத்தின் மத்திய சென்னை மகளிர் அணித் தலைவி

பஸ் ஸ்டாண்ட் ரோட்டில் படுத்து உறங்கினோம். ஒரு ஜெயில் கைதி மாதிரி இருந்தோம். தினமும் புளியோதரையை எங்களால் சாப்பிட முடியாமல் உடம்பு சரியில்லாமல் போனது. எங்களை ஊருக்கு அனுப்புகிறேன் என்று சொன்ன அதிகாரிகள் எல்லாம் வரவே இல்லை. எங்களுக்கு வாழ்க்கையே வெறுத்துப் போச்சு.

-விளம்பரம்-

பின்னர் வேறு வழியில்லாமல் நடந்தே ஊருக்குப் போயிடலாம் என்று நினைத்தோம். அப்பதான் மத்திய சென்னை மாவட்ட தலைவர் சிவபிரகாசம் போன் பண்ணினார். அவரிடம் நாங்கள் எங்கள் நிலைமையை சொன்னோம். பின்னர் அவர் எங்களை திருமண மண்டபத்தில் தங்க வைத்துவிட்டு ஒரே நாளில் நாங்கள் ஊருக்கு போவதற்கு பஸ் ரெடி பண்ணி கொடுத்தார். உண்ண உண்ணவும் வாங்கி தந்தார்.

எங்களுடன் நிலைமையைப் பார்த்து ஒரு வேன் பிடித்து கொடுத்தார். அதுக்கு உண்டான வாடகையும் அவரே கொடுத்தார். மேலும், என் மகள், மருமகன் புதுமண தம்பதிகள் என்பதால் அவர்களுக்கு 5000 ரூபாய் பணமும் கொடுத்தார். எங்களைக் காப்பாற்றியது அரசாங்கமோ, அதிகாரிகளோ இல்லை. எங்களது விஜய் மன்றத்தின் தூத்துக்குடி மாவட்டத் தலைவர் தான். விஜய் ரசிகர்களுக்கு எங்கேயாவது பிரச்னையாக இருந்தால் விஜய் ரசிகர்கள் தான் காப்பாற்றுவார்கள் என்று கூறினார்.

Advertisement