எவ்வளவோ சமாதானம் செய்தும் ஒதுக்காத விஜய், லேடி கெட்டப் போட காரணமான அவரது மகன் – சுவாரசியமான பின்னணி.

0
703
Vijay

தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான இயக்குனர்களில் செல்வா பாரதியும் ஒருவர். இவர் விஜய் நடிப்பில் வெளிவந்த நினைத்தேன் வந்தாய் என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தான் இயக்குனராக தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். மேலும், செல்வபாரதி இயக்கத்தில் 2000ம் ஆண்டு வெளிவந்த படம் தான் பிரியமானவளே. இந்த படத்தில் விஜய், சிம்ரன், எஸ் பி பாலசுப்ரமணியம், விவேக் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இந்நிலையில் இயக்குனர் செல்வபாரதி அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.

அதில் விஜய்யின் பிரியமானவளே படத்தில் விஜய் போட்ட லேடி கெட்டப் குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறியிருப்பது, ஜூன் ஜூலை மாதத்தில் என்ற பாடலை நாங்கள் எடுத்துக் கொண்டிருந்தோம். அப்போது விஜயிடம் லேடி கெட்டப் ஒரே ஒரு காட்சி போட வேண்டும் என்று சொன்னேன். ஆனால், விஜய் என் மூஞ்சிக்கு எல்லாம் அது செட்டாகாது. தயவுசெய்து என்கிட்ட சொன்னேன் என்று கூட வெளியில் சொல்லிடாதிங்க என்று சொன்னார். பின் நான் எம்ஜிஆர், சிவாஜி எல்லாரும் லேடி கெட்டப் போட்டு இருக்காங்க. இத விட்டால் உங்களுக்கு ஒரு சான்ஸ் கிடைக்காது. லேடி கெட்டப் போடுங்க என்று நானும் சொன்னேன்.

- Advertisement -

அவர் ஒத்துக்கவே இல்லை. அஜித் ரசிகர்கள நினைச்சி கொஞ்சம் யோசிச்சாறு. எனக்கும் மனசு செட் ஆகல. அவரை எப்படியாவது லேடி கெட்டப் போட்டு நடிக்க வைக்கனும் என்ற எண்ணம் ஓடிட்டே இருந்தது. அந்த சமயத்தில் தான் விஜய்க்கு மகன் பிறந்த செய்தி வந்தது. இதே சந்தோஷத்தில் நீங்கள் ஒரு லேடி கெட்டப் போட்டு விடுங்களேன் என்று கேட்டேன். அதற்கு விஜய் நீங்க என்ன வேணாலும் போடுங்க நான் ரெடி என்று சொல்லிட்டார். நான் உடனே விஜயை வைத்து லேடி கெட்டப் காட்சி எடுத்து விட்டேன்.

விஜய் அடுத்த நாள் வந்து அவர் நடித்த லேடி கெட்டப் பார்த்து விட்டு இதை எப்போ எடுத்தீங்க என்று கேட்டார். பையன் பிறந்த சந்தோஷத்தில் விஜய் அந்தளவிற்கு மெய் மறந்து போனார். பிறகு விஜய் இடம் இது இருக்கட்டும் என்று சொன்னேன். விஜய் அவங்க மனைவி டெலிவிரியை விட்டுட்டு வந்து கூட நடித்து தந்தார். அந்த அளவிற்கு டெடிகேட்டிவான மனிதர். அதனால் தான் அவர் இந்த அளவிற்க்கு உச்சத்தில் இருக்கிறார் என்று கூறினார்.

-விளம்பரம்-
Advertisement