Rolexகும் Leoவிற்கும் என்ன சம்மந்தம் – ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகும் ஹேஸ் டெக்

0
942
- Advertisement -

தளபதி 67 படத்தின் டைட்டில் வெளியான நிலையில் சம்மந்தமே இல்லாமல் #ரோலக்ஸ் என்ற ஹாஸ் டேக் தற்போது ட்ரெண்டாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் உச்ச நடிகராக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். சமீபத்தில் விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் வெளியாகி இருந்த ‘வாரிசு’ படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான பீஸ்ட் மற்றும் வாரிசு படம் இரண்டும் ரசிகர்களை திருப்த்தி படுத்த தவறிய நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை தான் ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றன்ர்.

-விளம்பரம்-

அதற்கு முக்கிய காரணமே அந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் என்பதால் தான். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என்று அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் தற்போது மீண்டும் விஜய்யுடன் இணைந்து இருக்கிறார். இந்த படத்தின் பூஜை கடந்த மாதம் நடைபெற்ற நிலையில் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகளுக்காக படக்குழு காஷ்மீர் சென்றுள்ளது. இந்த நிலையில் தான் படத்தின் டைட்டில் இன்று வெளியாகியது.

- Advertisement -

படத்தின் டைட்டில் :

கை மற்றும் உடல் முழுவதும் ரத்தம் தெறிக்க விஜய் காட்சி அளிக்கும் ஒரு போஸ்டரை வெளியிட்டு இந்த படத்தின் அப்டேட் குறித்து நேற்று ஸ்பெஷல் போஸ்டர் வெளியாகி இருந்தது. இதனால் தளபதி 67 படத்தின் டைட்டில் என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த நிலையில் தற்போது அந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மேலும், இந்த படத்திற்கு ‘ leo ‘ என்று தலைப்பு வைத்துள்ளனர்.

ட்ரெண்டாகும் #ரோலக்ஸ் :

இப்படி தளபதி 67ன் அப்டேட் கிடைத்துள்ள நிலையில் படத்திற்கு சம்மந்தமே இல்லாமல் விக்ரம் படத்தில் வந்த #ரோலஸ்க் என்ற ஹாஸ் டேக் தற்போது ட்விட்டர் பக்கத்தில் ட்ரெண்டாகி வருகிறது. அதாவது “LEO” என்று படத்தின் டைட்டில் வெளியானதில் இருந்து ரசிகர்கள் அந்த ப்ரோமோவில் உள்ள அர்த்தங்களை தெரிந்து கொள்வதில் மும்மரமாக இறங்கியுள்ளனர். ரசிகர்களின் கூற்று படி ரோலக்ஸ் தான் LCU யூனிவெர்சின் தந்தை என்று பதிவிட்டு வருகின்றனர்.

-விளம்பரம்-

லோகேஷ் சினிமாட்டிக் யூனிவெர்ஸ் (LCU) :

மேலும் லியோ ப்ரோமோவில் விஜய் பலவிதமான ஜக்கோலாட்டுகளை தயாரிக்கிறார். மேலும் அடுத்த காட்சியில் ஒரு வாளையும் தயாரிக்கிறார். இப்படி தயாரிக்கும் போது வரிசையாக பல கார்கல் அவர் இருக்கும் இடத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. முடிவில் விஜய் விக்ரம் படத்தில் ரோலக்ஸ் செய்தது போல சாக்லேட் துளியும் வாளைப் பிடித்தபடி ப்ரோமோ முடிகிறது. மேலும் அப்படி வரும் கார்கள் விக்ரம் படத்தில் கடைசி காட்சியில் நிற்க வைக்கப்பட்டிருந்தவை என்றும் ரோலக்ஸ் தான் லியோவை பார்க்க வருகிறார் என்றும் கூறுகின்றனர்.

ரோலக்ஸ் தான் முக்கியமான கதாபாத்திரம் :

இது ஒரு புறம் இருக்க நடிகர் சூர்யா ரசிகர்கள் மறுபுறம் “லியோ” என்பது இயக்குனர் லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்சில் ஒரு பகுதி தான் என்றும், எல்.சி.யு முழுக்க “ரோலக்ஸ்” தான் முக்கிய கதாபாத்திரமாக இருக்கும் என்று விஜய் ரசிகர்களை எதிர்க்க ஆரம்பித்தனர். இப்படி ப்ரோமோ வெளியானதில் இருந்தேன் சர்ச்சை ஆரம்பித்த நிலையில் போக போக இது உக்கிரமடையும் என்று தோன்றுகிறது.

Advertisement