இரவில் நடிகையை தொல்லை செய்த விஜய், அட்வைஸ் செய்த எஸ் ஏ சி – சர்ச்சையை கிளப்பிய பிரபல நடிகர்.

0
15617
vijay
- Advertisement -

தமிழ் சினிமாவில் தளபதி என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார் நடிகர் விஜய். இவர் சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகளும் ஒரு மகனும் இருக்கின்றனர். இத்தனை ஆண்டுகள் தமிழ் சினிமாவில் இருந்தாலும், விஜய் குறித்து பல கிசுகிசுக்களும் எழுந்தது. அதிலும் நடிகை சங்கவியை நடிகர் விஜய் காதலித்தார் என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டது. இப்படி ஒரு நிலையில் நடிகை சங்கவியை இரவில் நடிகர் விஜய் தொல்லை செய்துள்ளதாக நடிகரும் சர்ச்சை பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

-விளம்பரம்-

தமிழில் வில்லன் நடிகராக திகழ்ந்து வந்த நடிகர் பயில்வான் ரங்கநாதன் தற்போது பத்திரிகையாளராக இருந்து வருகிறார். அடிக்கடி நடிகர் நடிகைகளை பற்றி சர்ச்சையான விஷயங்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தி வரும் இவர் சமீபத்தில் விஜய் மற்றும் சங்கீதவின் காதல் கதை குறித்து பேசுகையில், நடிகர் விஜய் சங்கவி மீது காதல் கொண்ட போது, சங்கவியை தினமும் இரவு நேரத்தில் விஜய் தொந்தரவு செய்ததாகவும் பின்னர் எஸ் ஏ சந்திரசேகர் சொன்னதால் சங்கீதாவின் காதலை விட்டுவிட்டார் என்று கூறியுள்ளார்.

இதையும் பாருங்க : வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாமல் வறுமையில் வாடிய பாகவதர் குடும்பம் – உடனடியாக ஸ்டாலின் செய்த உதவி.

- Advertisement -

நடிகை சங்கவி தனது 16 வயதில் அஜித்தின் அமராவதி படத்தில் நடித்து பிரபலம் ஆனார். அதன் பின்னர் இவருடைய நடிப்பு திறமையால் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழி படங்களிலும் 95 படங்களுக்கு மேல் நடித்தார். விஜய், அஜித், ரஜினி, விஜயகாந்த், கமல் சரத்குமார், பிரபு, சத்யராஜ் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்தவர் சங்கவி.

அஜித்துடன் முதல் படத்தில் நடித்த சங்கவி அடுத்த படத்திலேயே விஜயுடன் நடித்தார். இந்த படத்தை விஜய்யின் தந்தை எஸ் ஏ சி தான் இயக்கி இருந்தார். அதே போல இந்த படத்தில் விஜய்யுடன் படு நெருக்கமான நடித்தார் சங்கவி. ரசிகன் படத்திற்கு பின்னர் சங்கவி விஜய்யுடன் விஷ்ணு, கோயம்பத்தூர் மாப்பிள்ளை போன்ற பல படங்களில் நடித்தார். மேலும், தனது 38 வயதில் திருமணம் செய்துகொண்ட சங்கவிக்கு 42வது வயதில் தான் குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement