தமிழ் சினிமா உலகில் இளம் இயக்குனராக வளர்ந்து கொண்டிருப்பவர் பிரதீப் ரங்கநாதன். இவர் கோமாளி படத்தின் மூலம் தான் இயக்குனராக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். ஆனால், இவர் முதலில் குறும்படம் தான் எடுத்து இருந்தார். அதன் பின் தான் கடந்த 2019 ஆம் ஆண்டு இவரது இயக்கத்தில் “கோமாளி” படம் வெளியாகி இருந்தது.இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடித்து இருந்தார். இவர்களுடன் இந்த படத்தில் ரீதிகா மோகன், கே. எஸ். ரவிக்குமார், யோகி பாபு உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தனர்.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியடைந்து. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து லவ் டுடே என்ற படத்தை இயக்கி அதில் ஹீரோவாகவும் பிரதீப் ரங்கநாதன்நடித்து இருந்தார் . இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். இந்த படத்தில் இவானா, ராதிகா சரத்குமார், சத்யராஜ், யோகி பாபு, ரவீனா ரவி, விஜய் வரதராஜ் உட்பட பல நடிகர்கள்நடித்து இருந்தனர்.
மேலும், விமர்சன ரீதியாக லவ் டுடே படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புபெற்று இருந்தது. என்னதான் இந்த படம் திரையரங்குகளில் கொண்டாடப்பட்டாலும் இந்த படம் OTTயில் வெளியான போது ஆண்களின் Toxic நடத்தையை ரொமாண்டிசைஸ் செய்யும் விதத்திற்காகவும், பெண்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டும் படியும் இருப்பதாக பலராலும் விமர்ச்சிக்கப்பட்டு வந்தது.

இந்த படம் OTTயில் வெளியாகிய நிலையில் இந்த திரைப்படம் வெளியாகி 100 நாட்கள் ஆனதையொட்டி படக்குழு வெற்றியைக்கொண்டாடியது. இப்படி ஒரு நிலையில் லவ் டுடே படக்குழு குறித்து விஜய்யின் லவ் டுடே படத்தின் இயக்குனர் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் ' தாமதமான பதிவு… ஆனால் தாங்கமுடியாத பதிவு…லவ் டுடே 100த் டே சிறப்பாக கொண்டாடினார்கள்…யூ டூபில் கிளிப்பிங்ஸ் பார்த்தேன்
என் டைட்டில்…ஒரு மரியாதைக்கு கூட கூப்பிடல ..நன்றி சொல்லல.. ஊரே திட்னது க் கப்புறம் ட்விட்டர் ல தேங்க்ஸ்…நல்லா வருவீங்க… சார்.. யாரோட டைட்டில்…யாரோ எடுத்து சம்பாதிக்கறானுக…நாம இன்னும் போராடிக்கிட்டு தான் இருக்கோம்..
இத்தன நாள் ஒரு சின்ன நம்பிக்கை… வருவாங்க.. வந்து பேசுவாங்கன்னு… ம் ம் ம் மனசு தங்கமுடியாம எழுதறே' என்று வருத்தமுடன் பதிவிட்டுள்ளார்.

லவ் டுடே என்ற தலைப்பில் நடிகர் விஜய் ஏற்கனவே நடித்துவிட்டார். அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் ஹிட் அடித்தது. மேலும், விஜய்யின் சூப்பர் ஹிட் தலைப்பை கொடுத்ததற்கு படத்தின் தயாரிப்பாளர் விஜய்க்கு நன்றி தெரிவித்திருந்தார். மேலும், லவ் டுடே படத்தின் தலைப்பை கொடுத்த ஆர்பி சவுத்ரி மற்றும் தளபதி விஜய்க்கு நன்றி என்று படத்தின் ஹீரோ பிரதீப் டீவ்ட்போட்டு இருந்தார்.
இவரின் டீவ்ட் சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து சில ஆண்டுகளுக்கு முன் விஜய் குறித்து பிரதீப் பேசி இருந்த கருத்து தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி ஆகியது. அன்று விஜய்யை கலாய்த்துவிட்டு இன்று அவர் படத்தின் தலைப்பையே வைத்து இருக்கிறார் என்று விஜய் ரசிகர்கள் பலரும் கேலி செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.






